Home
Gadgets

லட்டு மாதிரி விலை.. வெறும் ரூ.3999 போதும்.. 100 இன்ச் டிஸ்பிளே.. 4K வீடியோ.. 180டிகிரி ரோட்டேஷன்.. எந்த மாடல்?

பெருசா ஒன்னும் பீச்சர்கள் வேண்டாம், ப்ரீ டைமில் 100 இன்ச் புரொஜெக்சனில் குவாலிட்டியாக வீடியோ தெரிந்தால் போதும், அப்படி ஏதாவது புரொஜெக்டர் இருக்கானு? கேட்கும் கஸ்டமர்களுக்கு டெக்சோக்ஸ் லூமா எல்இடி புரொஜெக்டர் (TecSox LUMA LED Projector) பக்காவாக களமிறங்கி இருக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் 100 இன்ச் புரொஜெக்சன் மட்டுமல்லாமல், 4K ரெசொலூஷன் சப்போர்ட், 180 டிகிரி ரோட்டேஷன் போன்ற பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டெக்சோக்ஸ் லூமா புரொஜெக்டரின் பீச்சர்கள், விலை இதோ.

கம்மி காசுக்கு என்ன பீச்சர்களை எதிர்பார்க்க முடியுமோ அதை இந்த லூமா புரொஜெக்டர் கொடுக்கிறது. இது கிட்டத்தட்ட கையில் எடுத்து செல்லும்படி காம்பாக்ட் டிசைனில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், 180 டிகிரி ரோட்டேஷன் கிடைப்பதால், சுவற்றில் மட்டுமல்லாமல், சீலிங்கில் கூட உங்களால் புரொஜெக்சன் செய்து கொள்ள முடியும்.

லட்டு மாதிரி விலை.. வெறும் ரூ.3999 போதும்.. 100 இன்ச் டிஸ்பிளே!

அதேபோல அவுட்டோரிலும் தேவையான இடத்தில் எளிதாக மொபைலில் கனெக்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். எல்இடி லாம்ப் புரொஜெக்டர் மாடலாக இருப்பதால், வீடியோ குவாலிட்டியும் பட்ஜெட்டைவிட கூடுதலாக அவுட்புட் கொடுக்கும்படி இருக்கும். ஆண்ட்ராய்டு ஓஎஸ் சப்போர்ட் கிடைப்பதால், ஈஸியாக பயன்படுத்தி கொள்ளலாம்.

டெக்சோக்ஸ் லூமா எல்இடி புரொஜெக்டர் அம்சங்கள் (TecSox LUMA LED Projector Specifications): இந்த லூமா புரொஜெக்டர் மூலம் 720 ரெசொலூஷன் கிடைக்கிறது. 4K வீடியோ சப்போர்ட் உள்ளது. இந்த ரெசொலூஷனில் 100 இன்ச் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். அதிகபட்சமாக 130 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளும்படி இந்த புரொஜெக்டரில் ஆப்ஷன் இருக்கிறது.

200 ஏஎன்ஐசி லூமென்ஸ் (ANSI Lumens) பெற்று கொள்ளலாம். 180 டிகிரி வரையில் ரோட்டேஷனல் வருவதால், ஆட்டோ அரிசான்டல் கீஸ்டோன் (Auto Horizontal Keystone) கிடைக்கிறது. இந்த கீஸ்டோன் மட்டுமல்லாமல், 4 பாய்ட் கரெக்சன் கிடைக்கிறது. ஆகவே, புரொஜெக்சன் கன்ட்ரோல்களை எளிதாக செய்து கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) வருகிறது.

ஆகவே, மொபைலில் எளிதாக கனெக்ட் செய்து ஸ்கிரீன் புரொஜெக்சன் செய்து கொள்ள முடியும். இந்த டெக்சோக்ஸ் லூமா எல்இடி புரொஜெக்டரில் வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth v5.0) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இந்த வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள் மட்டுமல்லாமல், யுஎஸ்பி (USB) மற்றும் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட் சப்போர்ட் கிடைக்கிறது.

ஆடியோ அவுட் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஆடியோ சப்போர்ட் உள்ளது, இருப்பினும் எக்ஸ்டர்னல் ஆடியோ தேவைப்படுகிறது. ஆப்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆகவே, இந்த டெக்சோக்ஸ் லூமா எல்இடி புரொஜெக்டரில் நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற ஓடிடி ஆப்களும் மியூசிக் ஆப்களும் கிடைக்கின்றன. ஆகவே, ஓடிடிக்கு பக்கா ஆப்ஷனாகும்.

வை-பை 6 கனெக்டிவிட்டி வருவதால், ஸ்ட்ரீமிங் வீடியோக்கள் லாக்-ப்ரீ அவுட்புட் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த டெக்சோக்ஸ் லூமா எல்இடி புரொஜெக்டருக்கு ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கிறது. ஆகவே, புரொஜெக்டருடன் ரிமோட்டும் வருகிறது. 750 கிராம் எடை மட்டுமே வருகிறது. ஆகவே, எளிதாக அவுட்டோரில் எடுத்து சென்று பயன்படுத்தலாம்.

இந்த பீச்சர்களுடன் ரூ.3,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. டெக்சோக்ஸ் ஆன்லைன் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ள கிடைக்கிறது. 6 மாத வாரண்டியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. அடிமட்ட பட்ஜெட்டில் டைம்-பாஸ் செய்ய ஓரளவு பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் புரொஜெக்டர் வேண்டுமானால், இந்த டெக்சோக்ஸ் லூமா எல்இடி மாடலை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TecSox LUMA LED Projector With 100 inch Projection Sale Under Rs 4000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X