Home
Gadgets

ஆர்டர் பிச்சிக்க போகுது.. வெறும் ரூ.299 போதும்.. BASS ஆடியோ.. வாய்ஸ் அசிஸ்டன்ட்.. PVC கேபிள்.. எந்த மாடல்?

ஆளுக்கு 2 ஆர்டர் போடலாம் போலயே என்று நினைக்கும்படியான அடிமட்ட பட்ஜெட்டில், நாய்ஸ் கேன்சலேஷன், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், இன்-லைன் கன்ட்ரோல், IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனில் டெக்சோக்ஸ் பேஸ்பட்ஸ் (TecSox Bassbuds) மாடல் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. வயர்டு இயர்போன் மாடலான இந்த டெக்சோக்ஸ் பேஸ்பட்ஸ் மெட்டல் பட்கள் மற்றும் பிவிசி கேபிள் கொண்டிருக்கிறது. இந்த டெக்சோக்ஸ் இயர்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மார்கெட்டில் ப்ளூடூத் இயர்பட்ஸ் அல்லது ப்ளூடூத் நெக்பேண்ட் போன்ற வயர்லெஸ் ஆடியோ மாடல்கள் வந்தாலும், அவசரத்துக்கு சார்ஜ் இல்லை என்றால், மியூசிக் மற்றும் வாய்ஸ் கால்களை செய்ய முடியாது. ஆனால், வயர்டு மாடல்களில் அதற்கு இடமில்லை. எப்போது வேண்டுமோ அப்போது உடனடியாக பயன்படுத்த முடியும். இதனாலேயே அதற்கு மவுசு குறையாமல் இருக்கிறது.

ஆர்டர் பிச்சிக்க போகுது.. வெறும் ரூ.299 போதும்.. BASS ஆடியோ.. வாய்ஸ்!

ஆகவே, கம்மி காசில் ஒரு வயர்டு இயர்பட்ஸ் மாடலை வாங்கி வைப்போம் என்று ஆடியோ பிரியர்கள் நினைக்கின்றனர். இவர்களுக்காக அடிமட்ட பட்ஜெட்டில் பக்கா பீச்சர்களுடன் இந்த டெக்சோக்ஸ் பேஸ்பட்ஸ் கிடைக்கிறது. வெறும் ரூ.299 பட்ஜெட்டில் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், முதலில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும்.

டெக்சோக்ஸ் பேஸ்பட்ஸ் அம்சங்கள் (TecSox Bassbuds Specifications): பிரீமியம் டிசைனில் பிளாக் (Black) மற்றும் நேவி (Navy) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிவிசி கேபிள் (PVC Cable) மற்றும் மெட்டல் பட்களை (Metal Buds) கொடுக்கிறது. கேபிளில் இன்-லைன் கன்ட்ரோல்கள் (In-line Controls) கிடைக்கின்றன. ஆகவே, வால்யூம் மற்றும் கால் கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம்.

கூடுதலாக சிரி அசிஸ்டன்ட் (Siri Assistant) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் வாய்ஸ் அசிஸ்டன்ட் எதிர்பார்க்க முடியாத பீச்சராகும். பேஸ் ஆடியே பிரியர்களுக்காக ஹை-பேஸ் (High BASS) சப்போர்ட் வருகிறது. பிரிஸ்டைன் ஆடியோவுடன் (Pristine Audio) 10 எம்எம் டிரைவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த டெக்சோக்ஸ் பேஸ்பட்ஸ் மாடலில் 1.2 மீ கேபிள் கிடைக்கும். இது வயர்டு மாடலாக இருந்தாலும், 3.5 எம்எம் ஜாக் வெர்ஷனாக இருக்கவில்லை. டைப்-சி (Type-C) வெர்ஷனாக வந்துள்ளது. ஆகவே, பிரீமியம் போன்களுக்கு பக்காவான மாடலாக இருக்கும். அடிமட்ட பட்ஜெட்டில் கிடைப்பதால், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் கொடுக்கப்படவில்லை.

இருப்பினும், பாசிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Passive Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டெக்சோக்ஸ் பேஸ்பட்ஸ் மாடலுக்கு IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் கால் கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். அதாவது, கால் வரும்போது அண்டன்ட் செய்வது மற்றும் கட் செய்வது போன்றவற்றை செய்து கொள்ளலாம்.

டெக்சோக்ஸ் பேஸ்பட்ஸ் விலை (TecSox Bassbuds Price): இந்த பேஸ்பட்ஸ் வயர்டு மாடலின் விலை ரூ.499 ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் வெறும் ரூ.299 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு டெக்சோக்ஸ் தளத்தில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த டெக்சோக்ஸ் பேஸ்பட்ஸ் மாடலுக்கு 6 மாதங்களுக்கான வாரண்டி கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு பீச்சர்கள் பட்டையை கிளப்புகின்றன. டிசைன் மற்றும் குவாலிட்டியும் நன்றாகவே இருக்கிறது. ப்ளூடூத் இயர்பட்கள் இல்லாத நேரத்தில் பயன்படுத்த அடிமட்ட விலையில் வயர்டு இயர்போன் வேண்டுமானால், இந்த மாடலை ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TecSox Bassbuds Wired Earphones With Google Assistant Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X