Home
Gadgets

புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.990 போதும்.. 1.5 இன்ச் டிஸ்பிளே.. டீப்பேஸ் ஆடியோ.. IPX5 ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

மியூசிக் பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான அடிமட்ட பட்ஜெட்டில் 1.5 இன்ச் டிஸ்பிளே மட்டுமல்லாமல், IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட், டீப்-பேஸ் டிரைவர்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன், 40 மணி நேர பேட்டரி பேக்கப், டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங், டச் கன்ட்ரோல் போன்ற பீச்சர்களை பேக் செய்துள்ள டெக்சோக்ஸ் ஆல்பா (TecSox Alpha) இயர்பட்ஸ் களமிறங்கி இருக்கிறது. இந்த டெக்சோக்ஸ் ஆல்பா மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரூ.1000 பட்ஜெட்டில் இயர்பட்ஸ் கிடைத்தாலும், அதில் இருக்கும் பீச்சர்கள் சொல்லி கொள்ளும்படி இருக்காது. ஆனால், இந்த டெக்சோக்ஸ் ஆல்பா மாடலில் பீச்சர்களும் பட்டையை கிளப்புகிறது. அதே நேரத்தில் ஸ்மார்ட் டிஸ்பிளே கொண்ட சார்ஜிங் கேஸ் டிசைனும் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த அடிமட்ட விலை அறிமுக சலுகை மட்டுமே. ஆகவே, விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.990 போதும்.. 1.5 இன்ச் டிஸ்பிளே இயர்பட்!

டெக்சோக்ஸ் ஆல்பா அம்சங்கள் (TecSox Alpha Specifications): இந்த ஆல்பா மாடலில் 1.5 இன்ச் எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த ஸ்மார்ட் டிஸ்பிளேவில் (Smart Display) ரியல்-டைம் பேட்டரி ஸ்டேட்டஸ் மற்றும் கனெக்டிவிட்டி டீட்டெயில்களை பார்த்து கொள்ளலாம். அதேபோல காலிங் நோட்டிபிகேஷன்கள், நாய்ஸ் கேன்சலேஷன் கன்ட்ரோல்கள் போன்றவற்றை செய்து கொள்ளலாம்.

ஆடியோ டிரைவர்களை பார்க்கையில் 13 மிமீ டீப்-பேஸ் டிரைவர்கள் (DeepBass Drivers) வருகின்றன. இந்த டிரைவர்களில் எல்இடி லைட் (LED Light) இன்டிகேட்டர் இருக்கிறது. அதேபோல டச் கன்ட்ரோல் (Touch Control) கிடைக்கிறது. ஆகவே, ஆடியோ வால்யூம், கால் கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். லைட் வெயிட் பாடி (Lightweight Body) கொண்டிருப்பதால், காதுகளுக்கு இடையூறு இல்லாமல், இந்த டெக்சோக்ஸ் ஆல்பா மாடலை பயன்படுத்தலாம்.

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) மற்றும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) வருகிறது. ஆகவே, ஆடியோ குவாலிட்டி பட்டையை கிளப்பும்படி இருக்கும். அதேபோல வாய்ஸ் கால்களும் கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்கும். ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டி வருகிறது. ஆகவே, ஃபாஸ்ட் மற்றும் ஸ்டேபிள் கனெக்டிவிட்டி கிடைக்கும்.

கேமிங் பிரியர்களுக்கான அல்ட்ரா லோவ் லேட்டன்சி (Ultra Low Latency) கிடைக்கிறது. இந்த டெக்சோக்ஸ் ஆல்பா மாடலில் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 1 மீட்டர் ஆழம் வரையில் 30 நிமிடங்களுக்கு தாக்குப்பிடிக்க கூடியது. ஆகவே, ஸ்வெட் மற்றும் ரெயின் வாட்டர் டியூரபிலிட்டி பட்டையை கிளப்பும்படி இருக்கும். இந்த பட்ஜெட்டிலும் IPX5 ரெசிஸ்டன்ட் வரவேற்கத்தக்கதுதான்.

இந்த ஆல்பா மாடலில் 40 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். டைப்-சி போர்ட் (Type-C Port) வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது. என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் சிப் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு 6 மாதங்கள் வாரண்டி கொடுக்கப்படுகிறது. ஒயிட் (White) கலரில் மட்டும் ஆர்டருக்கு வருகிறது. ரூ.1,299ஆக விலை இருக்கிறது.

இருப்பினும், அறிமுக சலுகையில் வெறும் ரூ.990 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்னாப்டீல் (Snapdeal) தளத்தில் மட்டுமே இந்த விலைக்கு கிடைக்கும். அதுவே அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.1299ஆக விலை இருக்கும். ஆகவே, அறிமுக சலுகையில் இந்த ஸ்மார்ட் டிஸ்பிளே கொண்ட டெக்சோக்ஸ் ஆல்பா இயர்பட்ஸ் மாடலை ஆர்டர் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
TecSox Alpha With Smart Display TWS Bluetooth Earbuds Sale Under 1000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X