தூக்கி 2 பாக்கெட்ல போடுங்க.. வெறும் ரூ.499 போதும்.. 30 மணி நேர பேக்கப்.. புது பட்ஜெட் இயர்பட்ஸ்.. எந்த மாடல்?
டெக்பாட்ஸ் (TECPODS) நிறுவனத்தின் டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் மாடல்கள் மலிவான விலையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மற்ற பிராண்ட்களில் 1 இயர்பட்ஸ் வாங்கும் பணத்தில் இந்த நிறுவனம் 2 இயர்பட்களை கொடுத்துவிடும்படி பட்ஜெட் நிர்ணயிக்கப்படுகிறது. இப்போது, அடிமட்ட பட்ஜெட்டில் டெக்பாட்ஸ் எப்50 டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஆம்பியன் நாய்ஸ் கேன்சலேஷன் (Ambient Noise Cancellation) கொண்ட மாடலாக இந்த டெக்பாட்ஸ் எப்50 டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் (TECPODS F50 TWS Earbuds) களமிறங்கி இருக்கிறது. மலிவான விலைக்கு கிடைத்தாலும், பிரீமியம் லுக் கொடுக்கும்படி டிசைன் இருக்கிறது. டூயல் டோன் கொடுக்கும் பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) கலர்களில் கிடைக்கிறது. ஐபிஎக்ஸ்4 (IPX4) ரேட்டிங் கொடுத்துள்ளது.

கூடுதலாக ஸ்வெட் ப்ரூப் (Sweat Proof) கொண்ட மாடலாகவும் இது இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நினைத்து கூட பார்க்க முடியாதபடி ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், டச் கன்ட்ரோல் மற்றும் மேக்னட்டிக் கேஸ் லிட் (Magnetic Case Lit) கொடுக்கப்பட்டு இருக்கிறது. சார்ஜிங் கேஸில் எல்இடி இன்டிகேட்டர் (LED Indicator) வருகிறது. லைட் வெயிட் மற்றும் இயரிங் கம்போர்ட் கொடுக்கிறது.
டெக்பாட்ஸ் எப்50 டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் அம்சங்கள் (TECPODS F50 TWS Earbuds Specifications): 13.2 எம்எம் டைனாமிக் டிரைவர்கள் (Dynamic Drivers) கிடைக்கின்றன. டீப் பேஸ் (Deep Bass) கொடுக்கிறது. ஆகவே, பவர்ஃபுல் டீப் மற்றும் பஞ்ச்சி ஆடியோ அவுட்புட் எதிர்பார்க்க முடியும். கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கிளாரிட்டி கொடுக்க கிளியர் கால்கள் (Clear Calls) பீச்சரை இந்த டெக்பாட்ஸ் எப்50 இயர்பட்ஸ் கொடுக்கிறது.
ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கொடுத்துள்ளது. மொபைல், டேப்லெட், லேப்டாப்களில் உடனடியாக கனெக்ட் செய்து கொள்ள இன்ஸ்டன்ட் பேரிங் (Instant Pairing) சப்போர்ட் கிடைக்கிறது. ஆம்பியன்ட் நாய்ஸ் கேன்சலேஷன் (Ambient Noise Cancellation) கொடுக்கிறது. ஆகவே, அவுட்டோர் நாய்ஸ் இல்லாமல், ஆடியோ அவுட்புட்டை இந்த டெக்பாட்ஸ் எப்50 டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் கொடுக்கும்.
சிங்கிள் சார்ஜில் 30 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. 70 சதவீத வால்யூமில் 30 மணி நேரங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது சார்ஜிங் கேஸ் கொடுக்கும் பேக்கப்பாகும். இயர்பட்களை ஃபுல் சார்ஜ் செய்தால் 7 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும். வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 2 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.
IPX4 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட்டை இந்த டெக்பாட்ஸ் எப்50 டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் கொடுத்துள்ளது. டச் கன்ட்ரோல் (Touch Control) கொடுத்து இருக்கிறது. இதில் பிளே, பாஸ், நெக்ஸ்ட், ப்ரீவியஸ் மற்றும் கால் அன்ஸரிங் கிடைக்கும். மேலும், வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட்டும் கொடுக்கப்படும். ஆட்டோ பேரிங் கனெக்டிவிட்டி கொடுக்கும் மாடலாகவும் இருக்கிறது.
ஈஎன்சி நாய்ஸ் ரெடக்சன் கொண்ட மாடலாகவும் இந்த டெக்பாட்ஸ் எப்50 டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் இருக்கிறது. இவ்வளவு பீச்சர்களுடன் வெறும் ரூ.499 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 6 மாதங்களுக்கு வாரண்டி கொடுக்கும்படி விற்பனைக்கு கிடைக்கிறது. டெக்பாட்ஸ் தளத்தில் வாங்கி கொள்ளலாம். மற்ற தங்களிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த பட்ஜெட்டில் பக்காவாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications