வியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

|

டிசிஎல் நிறுவனம் இன்று புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட் டிவி மாடல் பல்வேறு புதிய அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 55-இன்ச் 4கே ஏஐ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி

55-இன்ச் 4கே ஏஐ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி

டிசிஎல் அறிமுகம் செய்துள்ள 55-இன்ச் 4கே ஏஐ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் அமேசான் வலைதளம் மூலம் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 டைனமிக் பிக்சர் அட்ஜஸ்ட்மென்ட்

டைனமிக் பிக்சர் அட்ஜஸ்ட்மென்ட்

டிசிஎல் நிறுவனத்தின் 55-இனச் 4கே ஏஐ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக 3860 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு டைனமிக் பிக்சர் அட்ஜஸ்ட்மென்ட், சீன் பிக்சர் விரிவாக்கம் மற்றும் பிரைட்நஸ் கட்டுப்பாடு போன்ற பல்வேறு வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளது.

இஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண்.! சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!இஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண்.! சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

அசத்தலான சிப்செட் வசதி:

அசத்தலான சிப்செட் வசதி:

இந்த ஸ்மார்ட டிவி மாடல் பி8இ-உரிமம் கொண்ட குவாட்-கோர் சிபியு டிரிபிள்-கோர் 600-800 MHz GPU, 2GB DDR3 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூகுள் பிளே ஸ்டோர்

கூகுள் பிளே ஸ்டோர்

கூகுள் பிளே ஸ்டோர் வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவரும், அதன்படி நெட்ஃபிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, ஈரோஸ்நவ், ஜி5, போன்ற பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.!புதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.!

அமேசான் அலெக்சா குரல் கட்டளை

அமேசான் அலெக்சா குரல் கட்டளை

இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்தி சேனல்களை மாற்றுவது மற்றும் ஆடியோவை சரிசெய்தல் போன்ற டிவியின் முக்கிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த அமேசான் அலெக்சா குரல் கட்டளையைப் பயன்படுத்த வசதி செய்து தரப்பட்டுள்ளது, குறிப்பாகத் தொலைதூர குரல் தொழில்நுட்பத்துடன் வருகிறது இந்த ஸ்மார்ட்டிவி. ரிமோட்டில் பொத்தானை அழுத்தாமல் இதைத் தேர்வு செய்து பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகத் தான் இருக்கும்.

 ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள்

ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள்

இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவியில் உள்ளடக்கப்பட்ட ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ 5.1 ஆதரவு இருப்பதால் ஒரு நல்ல தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும், அதேசமயம் ஏஐ சார்ந்த அம்சங்கள் இன்டெர்நெட் மற்றும்
பல்வேறு செயலிகளை இயக்குவதற்கு வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள் மற்றும் விலை:

இணைப்பு ஆதரவுகள் மற்றும் விலை:

டிசிஎல் நிறுவனத்தின் 55-இனச் 4கே ஏஐ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் எச்டிஎம்ஐ 2.0, யுஎஸ்பி2.0, வைஃபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் உண்மை விலை ரூ.40,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
TCL unveils 55-inch 4K AI Android 9 TV in India for Rs 40,990: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X