TCL நிறுவனம் கம்மி விலையில் அறிமுகம் செய்த புதிய TCL TS3015 சவுண்ட்பார் சாதனம்.!
TCL நிறுவனம் இன்று புதிய TCL TS3015 என்ற ஹோம் தியேட்டர் சவுண்ட்பார் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய TCL TS3015 ஹோம் தியேட்டர் சவுண்ட்பார் மூலம் TCL நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்பு பட்டியலை விரிவுபடுத்தியுள்ளது. TCL TS3015 சவுண்ட்பார் விலை மற்றும் விற்பனை விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

TCL TS3015 வயர்லெஸ் சவுண்ட் பார்
TCL TS3015 வயர்லெஸ் சவுண்ட் பார் என்பது நிறுவனத்தின் இந்தியாவின் முதல் ஆடியோ தயாரிப்பு ஆகும். இந்நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி மற்றும் ஏர் கண்டிஷனர்கள் பிரிவிலும் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. TCL TS3015 சவுண்ட்பார் 2.1 சேனல் ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் 180 வாட் ஆடியோ வெளியீட்டைக் கொண்டுள்ளது.

ப்ளூடூத் 5.0
இதன் விளைவாக, பயனர்கள் உயர்ந்த மற்றும் துல்லியமான சவுண்ட் கொண்ட ஆடியோ அனுபவத்தை அனுபவிக்க முடியும். பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன், லேப்டாப் அல்லது வேறு எந்த கேஜெட்டிலிருந்தும் வயர்லெஸ் ஸ்ட்ரீமிங் செய்துகொள்ள ப்ளூடூத் 5.0 அம்சம் இந்த சவுண்ட்பார் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது 10 மீட்டர் இடைவெளியில் இணைப்பு வரம்பை வழங்குகிறது.

இணைப்பு விருப்பங்கள்
TCL TS3015சவுண்ட்பாரில் உள்ள மற்ற இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரையில் HDMI போர்ட், ஆப்டிகல், AUX லைன்-இன் அல்லது RCA இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் மற்றும் கட்டுப்பாட்டிற்காக இதற்குச் சிறிய ரிமோட் உடன் வருகிறது. இது பவர் ஆன், சவுண்ட் கண்ட்ரோல், புளூடூத் இணைப்பு மற்றும் சவுண்ட் மோடு கட்டுப்பாட்டுடன் வருகிறது.

விலை என்ன?
கூடுதலாக, இது மியூசிக் மற்றும் நியூஸ் மற்றும் மூவீஸ் என தனித்தனி அனுபவித்திற்காக பொருத்தமான சிறப்பு சவுண்ட் மோடுகளுடன் வருகிறது. TCL TS3015 சவுண்ட்பார் சாதனத்தின் வடிவமைப்பு அதை உங்கள் டிவிக்கு அடுத்ததாக வைக்கவோ அல்லது வழங்கப்பட்ட கிட் மூலம் சுவரில் பொருத்தவோ கச்சிதமாக அனுமதிக்கிறது. இந்த சாதனம் ரூ.8,999 விலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications