மூன்று 4K ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த TCL.! விலை எவ்வளவு தெரியுமா?
தற்போது இந்திய சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக ஒன்பிளஸ், டிசிஎல், சாம்சங், சியோமி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபலமான டிசிஎல் நிறுவனம் டி6ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது டிசிஎல் டி6ஜி சீரிஸ் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் என்ற மூன்று ஸ்மார்ட் டிவிகள் தான் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்போது இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய டிசிஎல் டி6ஜி சீரிஸ் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 3840 × 2160 பிக்சல்ஸ், 4கே QLED டிஸ்பிளே, 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன், எச்டிஆர் 10, AiPQ Engine 3.0 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக 4கே டிஸ்பிளேவுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
இந்த டிசிஎல் டி6ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் 64-பிட் குவாட்கோர் பிராசஸர் வசதியுடன் மாலி-ஜி31எக்ஸ் 2800MHz GPU ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கூகுள் டிவி (ஒஎஸ்) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக எண்ட் டு எண்டு டிஸ்பிளே, பெசல்-லெஸ் டிசைன் போன்ற பல சிறப்பான வசதிகளுடன் டிசிஎல் டி6ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டிசிஎல் நிறுவனம்.
டிசிஎல் டி6ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு யூடியூப், பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இப்போது அறிமுகம் செய்யப்பட்ட டிவிகளின் பயன்படுத்த முடியும். மேலும் ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் ஆதரவும் கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவுகளுடன் இந்த டிவிகளை இயக்க முடியும்.
வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த புத்தம் புதிய டிசிஎல் எ6ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள். மேலும் 43-இன்ச் மற்றும் 50-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 30W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மட்டும் 56W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. குறிப்பாக டிசிஎல் டி6ஜி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் டால்பி அட்மோஸ் மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் ஆடியோ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன.

டிசிஎல் டி6ஜி 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.38,990-ஆக உள்ளது. பின்பு இதன் 50-இன்ச் மாடல் ரூ.46,990-விலையிலும், 55-இன்ச் மாடல் ரூ.54,990-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் இந்த புதிய டிசிஎல் ஸ்மார்ட் டிவிகளை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவிகளை வாங்கினால் ரூ.4000 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








