Home
Gadgets

ஒன்பிளஸ் ஓரம்போ.. ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான TCL ஸ்மார்ட் டிவிகள்.!

டிசிஎல் நிறுவனம் இந்தியாவில் மூன்று ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. அதாவது டிசிஎல் எஸ்5400, எஸ்5400ஏ, எஸ்5403ஏ ஸ்மார்ட் டிவிகள் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளுகம் 32-இன்ச் அளவுகளில் தான் வெளிவந்துள்ளது.

அதேபோல் தனித்துவமான மென்பொருள் வசதி மற்றும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள். இப்போது இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் அறிமுகமான 3 TCL ஸ்மார்ட் டிவிகள்.!

32-இன்ச் எஸ்5400 ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே அம்சங்கள்
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 32-இன்ச் எஸ்5400 ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1920 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 ஆதரவு, 4000:1 contrast ratio, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

32-இன்ச் எஸ்5400ஏ, எஸ்5403ஏ ஸ்மார்ட் டிவிகளின் டிஸ்பிளே அம்சங்கள்
இந்த 32-இன்ச எஸ்5400, எஸ்5403ஏ ஸ்மார்ட் டிவிகள் ஆனது எச்டி ரெடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவிகள்1366 x 768 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 ஆதரவு, 3000:1 contrast ratio, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் அறிமுகமான 3 TCL ஸ்மார்ட் டிவிகள்.!

இயங்குதளம்?
குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் CA55x4 பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன. அதேபோல் 32-இன்ச் எஸ்5400 ஸ்மார்ட் டிவி ஆனது கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 32-இன்ச் எஸ்5400ஏ, எஸ்5403ஏ ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளன.

குறிப்பாக 32-இன்ச் எஸ்5400 ஸ்மார்ட் டிவி மாடல் 1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 32-இன்ச் எஸ்5400ஏ,எஸ்5403ஏ ஸ்மார்ட் டிவி மாடல்கள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் ஆடியோ வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டிசிஎல் நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் அறிமுகமான 3 TCL ஸ்மார்ட் டிவிகள்.!

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிசிஎல் ஸ்மார்ட் டிவிகள் டால்பி ஆடியோ வசதியுடன் 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. இவை சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். பின்பு பல்வேறு ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

கனெக்டிவிட்டி..
புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த மூன்று டிசிஎல் ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக ஒன்பிளஸ், சியோமி, சாம்சங் போன்ற நிறுவனங்களை விட சிறந்த டிஸ்பிளே வசதி மற்றும் தரமான ஆடியோ வசதியை வழங்குகிறது இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவிகள்.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் அறிமுகமான 3 TCL ஸ்மார்ட் டிவிகள்.!

என்ன விலை?
டிசிஎல் 32-இன்ச் எஸ்5400 ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.15,990-ஆக உள்ளது. பின்பு டிசிஎல் 32-இன்ச் எஸ்5400ஏ ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,490-ஆக உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகள் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு வருகிறது.

32-இன்ச் எஸ்5403ஏ ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,990-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியை ஆஃப்லைன் தளங்களில் வங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
TCL S-Series Smart TVs launched in India: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X