Home
Gadgets

75 இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த TCL.. டால்பி அட்மாஸ்.. 32GB மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?

டிசிஎல் நிறுவனம் இந்தியாவில் டிசிஎல் கியூ6சி பிரீமியம் 4கே கியூடி-மினி எல்இடி டிவிகளை (TCL Q6C Premium 4K QD-Mini LED TVs) அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் என மூன்று அளவுகளில் இந்த டிவிகள் வாங்க கிடைக்கும். இப்போது இந்த புதிய டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

டிசிஎல் கியூ6சி பிரீமியம் 4கே கியூடி-மினி எல்இடி டிவி அம்சங்கள் (TCL Q6C Premium 4K TV Specifications): தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் டிவிகள் 4கே கியூடி-மினி எல்இடி (4K QD-Mini LED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced), எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவிகளில் உள்ளன.

75 இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த TCL.. என்ன விலை?

டிசிஎல் கியூ6சி பிரீமியம் 4கே கியூடி-மினி எல்இடி டிவிகளில் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த உள்ளன.

64-பிட் குவாட் கோர் AIPQ Pro பிராசஸர் உடன் இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. அதேபோல் ஏஐ கலர், ஏஐ எச்டிஆர், ஏஐ கிளாரிட்டி என்ஹான்ஸ்மென்ட் உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த ஸ்மார்ட் டிவிகளில் உள்ளன. குறிப்பாக இந்த டிவிகளின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கூகுள் டிவி ஓஸ் (Google TV OS) மூலம் இந்த டிசிஎல் டிவி மாடல்கள் இயங்குகின்றன. ஆகவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவிகளில் கிடைக்கும். குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதுவும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்தலாம். அதேபோல் குரோம் காஸ்ட் பில்ட்-இன் ஆதரவும் இந்த டைவா ஸ்மார்ட் டிவிகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவிகளுடன் கிடைக்கும். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியும் கொண்டுள்ளது இந்த புதிய டிசிஎல் ஸ்மார்ட் டிவிகள். டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ONKYO 2.1Ch சவுண்ட் சிஸ்டம் ஆதரவுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளது.

வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஏவி இன்புட், டிஜிட்டல் ஆடியோ அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிசிஎல் கியூ6சி பிரீமியம் 4கே கியூடி-மினி எல்இடி டிவிகளில் உள்ளன.

விலை
டிசிஎல் கியூ6சி பிரீமியம் 4கே கியூடி-மினி எல்இடி டிவி 55 மாடலின் விலை ரூ.51,990-ஆக உள்ளது.
டிசிஎல் கியூ6சி பிரீமியம் 4கே கியூடி-மினி எல்இடி டிவி 65 மாடலின் விலை ரூ.70,990-ஆக உள்ளது.
டிசிஎல் கியூ6சி பிரீமியம் 4கே கியூடி-மினி எல்இடி டிவி 75 மாடலின் விலை ரூ.1,14,990-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TCL Q6C Premium 4K TV launched in india: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X