டிசிஎல் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்ட்டு ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
டிசிஎல் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறது. தற்சமயம் ஃபிளாக்ஷிப் பி8எஸ் சீரிஸ், மிட்-ரேன்ஜ் பி8இ சீரிஸ் மற்றும் பட்ஜெட் ரக பி8 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

குறிப்பாக புதிய டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல்களில் ஆண்ட்ராய்டு பை சாந்த மென்பொருள் அம்சங்கள் உள்ளது, எனவேஇயக்கத்திற்கு மிகவும்அருமையாக இருக்கும், அதே சமயம் வேகமாகவும் செயல்படும்.

ஏ.ஐ பிக்சர் என்ஜின்
இத்துடன் ஏஐ சார்ந் அம்சங்கள், வாய்ஸ் இன்டராக்ஷன், ஏ.ஐ பிக்சர் என்ஜின், ஸ்மார்ட் சவுண்ட் என்ஜின் உள்ளிட்ட ஆதரவுகளுடன் புதிய டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.44,990-விலையில் துவங்குகிறது
உயர ரக டிசிஎல் பி9எஸ் சீரிஸ் 65-இன்ச் மற்றும் 55-இன்ச் வேரியண்ட்கள் முறையே ரூ.44,990-விலையில் துவங்குகிறது. டிசிஎல் பி8இ சீரிஸ் 43, 50 மற்றும் 55-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. குறிப்பாக இதன் 55-இன்ச் டிசிஎல் பி8இ ஸ்மார்ட் ஏஐ டிவி கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

டிசிஎல் பி8 சீரிஸ் டிவிகள்
குறிப்பாக டிசிஎல் பி8 சீரிஸ் டிவிகள் 43,50 மற்றும் 55-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது, இதன் துவக்க விலை ரூ.27,990-ஆக உள்ளது, இதன் விற்பனை பற்றிய தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

சவுண்ட் அவுட்புட்
பின்பு புதிய டிவிகளில் இமேஜ் மற்றும் சவுண்ட் அவுட்புட் மேம்படுத்தும் விதமாக இதில் ஏஐ ஃபார்ஃபீ;ல்டு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகளில் யூடியூப் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிளே ஸ்டோர்களில் இருந்தும் பல செயலிகளை பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications