பழைய டிவி அம்பேல்.. 56 சதவீத ஆஃபரில் 65 இன்ச் 4K QLED டிவி.. டால்பி விஷன்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் பிளிப்கார்ட் பிக் பச்சட் டேஸ் சேல் (Flipkart Big Bachat Days Sale) என்னும் சிறப்பு விற்பனையில் 65 இன்ச் டிவி மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் டிசிஎல் பி7கே 65 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு (TCL P7K 65 inch QLED 4K Smart Google TV) நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிசிஎல் டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 56 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு டிசிஎல் பி7கே 65 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (TCL P7K 65 inch QLED 4K Smart Google TV 2025 Edition) மாடல் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.51,990 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,750 தள்ளுபடி கிடைக்கிறது.

ஆகவே, ரூ.47,240 விலைக்கு இந்த டிசிஎல் பி7கே 65 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடலை வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு வழியாக வாங்கினால், ரூ.3,500 தள்ளுபடி கிடைக்கிறது.
டிசிஎல் பி7கே 65 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (TCL P7K 65 inch QLED 4K Smart Google TV Specifications): மெட்டாலிக் பெசல்-லெஸ் (Metalic Bezel Less) டிசைனில் 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 350 நிட்ஸ் பிரைட்னஸ், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், ஏஐபிகியூ ப்ராசஸர் (AiPQ Processor) கொடுக்கப்பட்டு உள்ளது.
டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) கிடைக்கிறது. எச்விஏ பேனலை (HVA Panel) இந்த டிசிஎல் பி7கே 65 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடல் கொடுத்துள்ளது. எம்இஎம்சி (MEMC), டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Dynamic Color Enhancement), கேம் மாஸ்டர் (Game Master) கிடைத்துள்ளது. கேமிங்கில் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
மல்டிபிள் ஐ கேர் (Mutiple Eye Care) மோட்களை கொடுத்துள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS), 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த டிசிஎல் பி7கே 65 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் மாடல் கொடுத்துள்ளது. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், பிளே ஸ்டோர் கிடைப்பதால், ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். நெட்பிபிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (ZEE5) உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), ஏவி இன் (AV IN), ஹெட்போன் ஜாக் (Headphone Jack), வை-பை (Wi-Fi) கொடுக்கப்பட்டு உள்ளது.
ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) உள்ளது. 35W ஆடியோ அவுட் கொண்ட ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது. டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் மற்றும் ஓஎன்கேஒய்ஓ 2.1சிஎச் ஆடியோ சிஸ்டம் உள்ளது. 65P7K மாடல் மற்றும் P7K சீரிஸ் கீழ் இந்த டிசிஎல் பி7கே 65 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி வாங்கி கொள்ள கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








