முதல் ஆண்ட்ராய்டு 11 அம்சத்துடன் TCL P725 4K HDR LED TV அறிமுகம்: அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.!

|

TCL நிறுவனம் வரும் இன்று இந்தியாவில் அதன் முதல் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஸ்மார்ட் டிவிக்கு நிறுவனம் TCL P725 4K HDR LED TV என்று பெயரிட்டுள்ளது. இந்த சீரிஸ் இன் கீழ், நான்கு வெவ்வேறு அளவில் புதிய மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச தகவலை இப்போது பார்க்கலாம்.

புதிய TCL P725 4K HDR LED TV

புதிய TCL P725 4K HDR LED TV

புதிய TCL P725 4K HDR LED TV-கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தில் இயங்குகின்றன. இதன் அனைத்து வகைகளும் 4 கே எச்டிஆர் எல்இடி டி.வி.கள் என்பதனால் நீங்கள் எந்த வேரியண்ட் மாடலை வாங்கினாலும் அது உங்களுக்குச் சிறந்த தரமான காட்சி அனுபவத்தை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. TCL P725 4K HDR LED TVகள் 43' இன்ச், 50' இன்ச், 55' இன்ச் மற்றும் 65' இன்ச் என நான்கு மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TCL P725 4K HDR LED TV சிறப்பம்சம்

TCL P725 4K HDR LED TV சிறப்பம்சம்

டி.சி.எல் பி 725 4 கே எச்டிஆர் எல்இடி டிவி ஆண்ட்ராய்டு டி.வி என்பதால், இது ஆண்ட்ராய்டு டி.வி.களுக்கான கூகிள் பிளே ஸ்டோரில் இருக்கும் 7,000 க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் மற்றும் கேம்களுக்கான அணுகலுடன் வருகிறது. பிரபலமான ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ஆகியவை டிசிஎல் பி 725 4 கே எச்டிஆர் எல்இடி டிவியில் நேரடி ஆப்ஸ் மூலம் கிடைக்கின்றது.

வெறும் ரூ.299 செலுத்தி புதிய Itel 4ஜி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.. எப்படித் தெரியுமா?வெறும் ரூ.299 செலுத்தி புதிய Itel 4ஜி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.. எப்படித் தெரியுமா?

டால்பி அட்மோஸ் ஆடியோ மற்றும் டால்பி விஷன்

டால்பி அட்மோஸ் ஆடியோ மற்றும் டால்பி விஷன்

ஸ்மார்ட் டிவியின் அனைத்து வகைகளும் இன்-பில்ட் Chromecast உடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களிலிருந்து உள்ளடக்கத்தை டிவியில் பிரதிபலிக்க அனுமதிக்கிறது. இந்த புதிய டிவி சீரிஸ் டால்பி அட்மோஸ் ஆடியோ மற்றும் டால்பி விஷன் அம்சத்தை வழங்குகிறது. இது சிறந்த ஆடியோ மற்றும் வீடியோ பார்வை அனுபவத்தை வழங்குகிறது. இதில் MEMC (மோஷன் மதிப்பீடு மற்றும் மோஷன் காம்பென்சேஷன்) தொழில்நுட்பம் இருக்கிறது.

கூகிள் அசிஸ்டன்ட் அம்சம்

கூகிள் அசிஸ்டன்ட் அம்சம்

இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த புதிய டிவியில் வீடியோ கால் செய்வதற்கான கேமரா டிவி உடன் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையில் இயங்க கூடிய சாதனம் என்பதனால் இதில் கூகிள் அசிஸ்டன்ட் அம்சமும் உள்ளது. டிடிஎஸ் டிகோடிங் டெக், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் 2.0, செட் ரீமைண்டர், ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற பல ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TCL P725 4K HDR LED TV விலை

TCL P725 4K HDR LED TV விலை

டி.சி.எல் பி 725 4 கே எச்டிஆர் எல்இடி டிவி சீரிஸில் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு வெவ்வேறு அளவு மாடல்களில் இப்போது விற்பனைக்கு வாங்குவதற்கு கிடைக்கிறது. 43 இன்ச் வேரியண்டான மிகச் சிறிய மாடல் ரூ. 41,990 விலையில் கிடைக்கிறது. இதன் 50 இன்ச் வேரியன்ட் மாடல் ரூ.62,990 விலையிலும், இதன் 55 இன்ச் வேரியன்ட் மாடல் ரூ. 62,990 விலையில் கிடைக்கிறது. இதன் 65 இன்ச் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 89,990 விலையில் அமேசான் வழியாகப் பிரத்தியேகமாக விற்பனைக்குக் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
TCL P725 4K HDR LED TV Series Launched With Android TV 11 Platform In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X