சியோமி மி டிவியின் பாதி விலையில் டிசிஎல் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் டிவி.!
தொடர்ந்து சியோமி, சோனி, சாம்சங் போன்ற நிறுவனங்கள் மலிவு விலையில் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்தும் வண்ணம் உள்ளன, அந்தவரிசையில் இப்போது டிசிஎல் நிறுவனமும் இணைந்துள்ளது.
தொடர்ந்து சியோமி, சோனி, சாம்சங் போன்ற நிறுவனங்கள் மலிவு விலையில் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்தும் வண்ணம் உள்ளன, அந்தவரிசையில் இப்போது டிசிஎல் நிறுவனமும் இணைந்துள்ளது, தற்சமயம் மலிவு விலையில் மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் டிவி மாடல்களின் பெயர் iFFALCON 32F2, iFFALCON 40F2 மற்றும் FFALCON 55K2A என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் வரும் ஏப்ரல் 7, 2018-அன்று முதல் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்க முடியும் என்று டிசிஎல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஆஃபர்:
டிசிஎல் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்கள் விற்பனைக்கு வந்தால் ஜியோ சார்பில் குறிப்பிட்ட கேஷ்பேக் சலுகை மற்றும் டேட்டா ஆஃபர் போன்றவை கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

iFFALCON 55K2A:
iFFALCON 55K2A ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை 55-இன்ச் யூஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3,840 x 2160 பிக்சர் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மமார்ட் டிவி. இவற்றுள் சிறந்த தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது,குறிப்பாக இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ள எல்இடி எச்டி பேக்லைட் ஆனது சிறந்த வண்ணம் வரம்பை அதிகரிக்கிறது மற்றும் டைனமிக் நிற வேறுபாட்டை வழங்குகிறது.

ஆண்ட்ராய்டு 7.0:
iFFALCON 55K2A ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு, ஹாட்ஸ்டார், யூடியூப், நெட்ஃபிக்ஸ், கூகிள் ப்ளே மூவிஸ் மற்றும் டிவி, ஈரோஸ் நவ், போன்ற பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும் என டிசிஎல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்iFFALCON 55K2A ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் சிபியு மற்றும் டூயல்-கோர் ஜிபியு செயலி இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:
iFFALCON 55K2A மாடல் 2.56ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள் சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது, குறிப்பாக டால்பி 5.1 சரவுண்ட் சவுண்ட் மற்றும் மேம்பட்ட டி.டி.எஸ் சவுண்ட் தொழில்நுட்பம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. மேலும் அதன் ஸ்மார்ட் வால்யூம் அம்சமானது, சேனல்களை மாற்றும் போது பொதுவாக ஏற்படும் திடமான ஒலி ஏற்ற இறக்கங்களை அகற்றுவதற்கு தொகுதி தானாகவே சரிசெய்கிறது. அதன்பின்பு இந்த iFFALCON 55K2A ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.45,999-ஆக உள்ளது.

iFFALCON 32F2 மற்றும் iFFALCON 40F2:
டிசிஎல் அறிமுகப்படுத்தியுள்ள iFFALCON 32F2 மற்றும் iFFALCON 40F2 ஸ்மார்ட் டிவி மாடல்க் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, மேலும் சிறந்த உள்சேமிப்பு மற்றும் ரேம் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.பின்பு பல்வேறு செயலிகளை இவற்றுள் பயன்படுத்த முடியும் என டிசிஎல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு
iFFALCON 32F2ஸ்மார்ட் டிவி மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.13,499-ஆக உள்ளது, பின்னர் iFFALCON 40F2 ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.19,999-ஆக உள்ளது.


சியோமி:
டிசிஎல் நிறுவனம் இப்போது மலிவு விலையில் அறிமுப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கு போட்டியாக வெளிவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சியோமி 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.13,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications