இப்படி ஒரு TV வாங்கனும்.. 98 இன்ச் QD Mini-LED டிவி.. டால்பி அட்மோஸ்.. 64GB ஸ்டோரேஜ்.. 4K வீடியோ.. எந்த மாடல்?
இந்தியாவில் பட்ஜெட் விலையில் பிரீமியம் பீச்சர்களை கொடுக்கும் டிசிஎல் (TCL) நிறுவனத்தின் புதிய டிசிஎல் சி72கே கியூடி மினி எல்இடி டிவி (TCL C72K QD Mini LED TV) மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. டால்பி விஷன், டால்பி அட்மோஸ், 3 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் கலக்குகிறது. இந்த டிசிஎல் சி72கே கியூடி மினி எல்இடி டிவி மாடல்களின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டிஸ்பிளே, ஆடியோ, ஓஎஸ், ரேம் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பிரீமியம் காட்டும்படி இந்த மாடல்கள் இருக்கின்றன. 55 இன்ச் முதல் 98 இன்ச் வரையில் டிஸ்பிளேகள் கிடைக்கின்றன. எட்ஜ்லெஸ் எண்டிங் டிசைனில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், ஃபுல் ஸ்கிரீன் வியூவிங் அனுபவத்தை அடுத்த கட்டுத்துக்கு கொண்டு செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைப்பதால், லேக் ப்ரீ அவுட்புட் கிடைக்கும்.

மேலும், குவாண்டம் டாட் கலர்கள், ஹாலோ கன்ட்ரோல், ஹை-பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் என்ஹான்ஸ்மெண்ட்டிலும் கவனம் செலுத்தி இருக்கிறது. ஆகவே, நேர்ச்சுவல் கலர் மற்றும் கலர் அக்கியூரசி பட்டையை கிளப்பும்படி இருக்கும். மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) போன்ற கஸ்டமர்கள் விரும்பும் பீச்சர்களும் கிடைக்கின்றன. இப்போது முழு பீச்சர்களை பார்க்கலாம்.
டிசிஎல் சி72கே கியூடி மினி எல்இடி டிவி அம்சங்கள் (TCL C72K QD Mini LED TV Specifications): இந்த மினி எல்இடி மாடலில் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் டிஸ்பிளே மாடல்கள் கிடைக்கின்றன. அதேபோல 85 இன்ச் மற்றும் 98 இன்ச் டிஸ்பிளே மாடல்களும் இருக்கின்றன. இதில் 4K ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
முன்பே சொன்னதை போல எச்டிஆர்10, எச்டிஆர்10பிளஸ் டால்பி விஷன் போன்ற பிரீமியம் பிக்சர் பீச்சர்கள் கிடைக்கின்றன. கேமிங் பிரியர்களுக்காக 288Hz விஆர்ஆர் (VRR) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக ஏஎம்டி ப்ரீசின்க் பிரீமியம் ப்ரோ (AMD FreeSync Premium Pro) சப்போர்ட் உள்ளது. ஏஐ பீச்சர்களை பார்க்கையில், கிளாரிட்டி, கலர், மோஷன், சீன் போன்ற என்ஹான்மெண்ட்ஸ் கிடைக்கிறது.

ஆடியோ பீச்சர்களை பார்க்கையில், வழக்கம்போல டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டிடிஎஸ்:எக்ஸ் போன்ற பீச்சர்களுடன் ஆன்கியோ 2.1 (ONKYO 2.1) ஹை-பை சிஸ்டம் (Hi-Fi System) கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் ஆடியோ அனுபவம் கிடைக்கும். இந்த டிசிஎல் சி72கே கியூடி மினி எல்இடி டிவியில் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பிரீமியமாக எதிர்பார்க்கலாம்.
ஏஐபிகியூ ப்ரோ (AiPQ Pro) சிப்செட் மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் ( Google TV OS) கிடைக்கிறது. கூகுள் ஹோம், கூகுள் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளது. இந்த பிரீமியம் டிவிக்கு ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு சப்போர்ட் கிடைக்கிறறது. மேலும், கேம் மாஸ்டர், ஆர்ட் கேலரி போன்ற ஸ்மார்ட் பீச்சர்களை கொடுக்கிறது. இப்போது, டிசிஎல் சி72கே கியூடியின் விலை விவரங்களை பார்க்கலாம்.
டிசிஎல் சி72கே கியூடி மினி எல்இடி டிவி விலை (TCL C72K QD Mini LED TV Price): இந்த டிவியின் ஆரம்ப விலை ரூ.84,990ஆக இருக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் ஆப்லைன் பிராண்ட் ஸ்டோர்களிலும் விற்பனை தொடங்கிவிட்டது. இதுபோன்ற பீச்சர்களுடன் மற்ற பிராண்ட்களின் மாடல்களின் விலை அதிகமாக இருக்கிறது. இதில் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கிறது.


Click it and Unblock the Notifications








