பிளிப்கார்ட் மிரளும்.. பட்ஜெட்ல 43 இன்ச் கியூஎல்டி டிவி.. டால்பி ஆடியோ.. 2.1 இன்ச் சப்வூப்பர்.. எந்த மாடல்?
கியூஎல்டி டிவி பிரியர்கள் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், டால்பி விஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ், எச்டிஆர்10 பிளஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4K ரெசொலூஷன் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் டிசிஎல் சி69பி கியூஎல்இடி டிவி (TCL C69B QLED TV) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த கியூஎல்இடி டிவியின் பட்ஜெட், விற்பனை மற்றும் முழு பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.
இதில் 43 இன்ச் மற்றும் 55 இன்ச் டிஸ்பிளே வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. கியூஎல்இடி ப்ரோ (QLED Pro) மற்றும் டி-ஸ்கிரீன் ப்ரோ (T-Screen Pro) டெக்னாலஜிகள் வருகின்றன. இந்த டெக்னாலஜிகள் மூலம் காஸ்ட்ராஸ்ட் பூஸ்ட், இமேஜ் ஹாலோஸ் எலிமினேட்டிங், லைட் இன்டர்பேஸ் ரெடியூஸ் போன்றவை கன்ட்ரோல் செய்யப்படுகின்றன.

ஆகவே, கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளே அவுட்புட்டை இந்த டிசிஎல் சி69பி கியூஎல்இடி டிவிகளில் எதிர்பார்க்கலாம். குறிப்பாக ஏஐபிகியூ சிப்செட் மூலம் ரியல்-வேர்ல்டு கலர்களை டிஸ்பிளேவில் அவுட்புட்டாக பெற முடியும். மோஷன் பிளர் ரெடியூஸ், இமேஜ் டியரிங் போன்றவற்றில் இந்த சிப்செட் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது.
டிசிஎல் சி69பி கியூஎல்இடி டிவி அம்சங்கள் (TCL C69B QLED TV Specifications): இந்த டிவியானது, ஸ்லிம் பாடி (Slim Body) டிசைன் கொண்டிருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV) மற்றும் ஏஐபிகியூ (AiPQ) ப்ராசஸர் வருகிறது. கூகுள் ஓஎஸ் வருவதால், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் பிளே (Google Play), குரோம்காஸ்ட் (Cromecast) சப்போர்ட் வருகிறது.

ஆகவே, நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். மேலும், டிசிஎல் ஹோம் (TCL Home) சப்போர்ட் வருகிறது. வாய்ஸ் கன்ட்ரோல் ரிமோட் கொண்டிருக்கிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரையில் 43 இன்ச் மற்றும் 55 இன்ச் ஆகிய சைஸ் வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.
இதுவொரு 4K (3840 x 2160 பிக்சல்கள்) ரொசொலூஷன் கொண்ட கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் கியூஎல்இடி ப்ரோ, டி-ஸ்கிரீன் ப்ரோ, டிசிஐ பி3 கலர் காமட் சப்போர்ட் வருகிறது. 43 இன்ச் வேரியண்ட்டில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 55 இன்ச் வேரியண்ட்டில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
மேலும், டால்பி விஷன் (Dolby Vision), எச்எல்ஜி (HLG), எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 600 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் மல்டிபிள் ஐ கேர் (Multiple Eye Care) சப்போர்ட் வருகிறது. இந்த டிசிஎல் சி69பி கியூஎல்இடி டிவியின் ஆடியோவை பார்க்கையில், 43 இன்ச் வேரியண்ட்டில் 30W அவுட்புட் மற்றும் 55 இன்ச் வேரியண்ட்டில் 35W அவுட்புட் வருகிறது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) வருகிறது. இதுபோக 2.1 இன்ச் சப்வூப்பர் வருகிறது. இந்த கியூஎல்இடி டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி வருகிறது. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், கேம் மாஸ்டர், வீடியோ சாட், மிராகாஸ்ட், கியூக் செட்டிங்ஸ் உள்ளிட்டவை வருகின்றன.
ப்ளூடூத் வி5.0, வை-பை 5, எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போர்ட் கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இந்த டிவிக்கு 2 வருட வாரண்டி வருகிறது. 43 இன்ச் வேரியண்ட்டின் விலை ரூ.32,990ஆகவும், 55 இன்ச் வேரியண்ட்டின் விலை ரூ.45.990ஆகவும் நிர்யணம் செய்யப்பட்டிருக்கிறது. ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications