Home
Gadgets

வீட்டுக்கு வீடு இதான்.. பட்ஜெட்ல QLED டிவி.. சப்வூப்பர் வருது.. டால்பி ஆடியோ.. 32 ஜிபி மெமரி.. எந்த மாடல்?

கியூஎல்இடி டிவி மார்கெட் அதிரும் பட்ஜெட்டில் கூகுள் டிவி ஓஎஸ், டால்பி விஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, எச்டிஆர்10பிளஸ், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ், 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, ஏஐபிகியூ ப்ரோ சிப்செட், டி-ஸ்கிரீன் ப்ரோ டெக்னாலஜி மட்டுமல்லாமல் ஸ்லிம் டிசைன், சப்வூப்பர் போன்ற மற்ற பீச்சர்களிலும் தட்டித்துக்கும்படி டிசிஎல் சி61பி 4கே கியூஎல்இடி டிவி (TCL C61B 4K QLED TV) களமிறங்கி இருக்கிறது. இந்த டிவி குறித்த விவரம் இதோ.

கியூஎல்இடி டிவிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதால், பட்ஜெட்டில் அந்த மாடல்களை கொடுப்பதில் ஸ்மார்ட் டிவி தயாரிப்பு நிறுவனங்களிடையே போட்டியே தொடங்கிவிட்டது. இப்போது, டிசிஎல் நிறுவனம் பட்ஜெட்டில் சி61பி சீரிஸ் கிஎல்இடி (C61B Series QLED) டிவிகளை இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இதில் டி-ஸ்கிரீன் ப்ரோ டெக்னாலஜி, 32 ஜிபி மெமரி கவரும்படி இருக்கிறது.

வீட்டுக்கு வீடு இதான்.. பட்ஜெட்ல QLED டிவி.. சப்வூப்பர் வேற இருக்கு!

டிசிஎல் சி61பி 4கே கியூஎல்இடி டிவி அம்சங்கள் (TCL C61B 4K QLED TV Specifications): இந்த டிசிஎல் டிவியில் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த டிஸ்பிளேவில் 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

கியூஎல்இடி ப்ரோ (QLED Pro), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), டி-ஸ்கிரீன் ப்ரோ (T-SCREEN- PRO) பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, விவிட் விசுவல், கான்ட்ராஸ்ட் என்ஹான்ஸ்மென்ட், ஆன்டி-கிளார் போன்றவற்றில் இந்த டிவியில் பட்டையை கிளப்பும் டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டில் கேமிங் ஆக்சிலேட்டர் வருகிறது.

ஆகவே, கேமிங் விசுவலின் போது, இந்த ரெஃப்ரஷ் ரேட் ஆட்டோ அட்ஜஸ்ட் செய்யப்பட்டு, லோவ் லேட்டன்சி இல்லாமல் கொடுக்கப்படும். மேலும், எம்இஎம்சி (MEMC) சப்போர்ட் வருகிறது. ஸ்லிம் மற்றும் யுனி-பாடி டிசைனில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. ஃபிளிக்கர்-ப்ரீ, லோவ் ப்ளூ லைட் மற்றும் நோச்சுரல் லைட் ஆப்டிமைசேஷன் போன்ற மல்டிபிள் ஐ கேர் (Multiple Eye Care) சப்போர்ட் வருகிறது.

இந்த டிசிஎல் சி61பி 4கே கியூஎல்இடி டிவியின் ஆடியோவை பார்க்கையில், டால்பி அட்மோஸ் ஆடியோ சிஸ்டம் (Dolby Atmos Audio System) வருகிறது. அதேபோல டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் ( DTS Virtual: X) சப்போர்ட் உள்ளது. 35W ஆடியோ அவுட்புட் பெறலாம். 55 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களில் கூடுதலாக ஆன்கியோ 2.1 இன்ச் (ONKYO 2.1 inch) சப்வூப்பர் வருகிறது.

ஆகவே, ஹோம் தியேட்டர் ஆடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த டிவியில் கூகுள் டிவி ஓஸ் (Google TV OS), ஏஐபிகியூ ப்ரோ (AiPQ Pro) சிப்செட் வருகிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பிரீமியமாக இருக்கும். கூகுள் டிவி ஓஎஸ் வருவதால், கூகுள் மீட், கூகுள் கிட்ஸ், கூகுள் வாட்ச்லிஸ்ட், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், குரோம்காஸ்ட் போன்ற பீச்சர்கள் வருகின்றன.

அதேபோல ஓடிடி முதல் கேமிங் ஆப்கள் வரையில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பெற்று கொள்ளலாம். இந்த டிவியில் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி வருகிறது. ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0), வை-பை 5 (Wi-Fi 5), 3 எச்டிஎம்ஐ போர்ட், 1 யுஎஸ்பி போர்ட் மற்றும் 1 ஹெட்போன் அவுட்புட் வருகிறது. ஈதர்நெட், செட்-டாப் பாக்ஸ் கேபிள் கனெக்டிவிட்டியும் உள்ளது.

கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் ரிமோட் வருகிறது. இந்த டிசிஎல் சி61பி 4கே கியூஎல்இடி டிவிக்கு 2 வருடங்கள் வாரண்டி கிடைக்கிறது. 32 இன்ச் மாடலின் விலை ரூ.32,990ஆகவும், 50 இன்ச் மாடலின் விலை ரூ.37,990ஆகவும், 55 இன்ச் மாடலின் விலை ரூ.45,990ஆகவும் இருக்கிறது. 65 இன்ச் மாடலின் விலை ரூ.72,990ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் பேங்க் ஆஃபருடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
TCL C61B 4K QLED TV With Dolby Atmos, 32GB Storage Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X