Home
Gadgets

டிசிஎல் நிறுவனத்தின் புதிய 85-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!

இந்தியாவில் டிசிஎல் நிறுவனம் தனது புதிய 85-இன்ச் பி8எம் 4கே ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செயதுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது விரைவில் ஆன்லைனில் விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசிஎல் நிறுவனத்தின் புதிய 85-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை?

டிசிஎல் நிறுவனத்தின் புதிய 85-இன்ச் பி8எம் 4கே ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக இந்த 85-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே யுஎச்டி பேனல் மற்றும் டால்பி ஆடியோ கொண்டு வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். மேலும் கூகிள் பிளே கேம்ஸ், கூகிள் பிளே மூவிஸ், யூடியூப் நெட்ஃபிக்ஸ் மற்றும் பிற செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசிஎல் நிறுவனத்தின் புதிய 85-இன்ச் பி8எம் 4கே ஸ்மார்ட் டிவியின் இணைப்பு ஆதரவுகள் பொறுத்தவரை, புளூடூத் 5.0, வைஃபை 802.11 பி /ஜி / என் 2 டி 2 ஆர், ஈதர்நெட் நெட்வொர்க், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

டிசிஎல் 85-இன்ச் பி8எம் 4கே ஸ்மார்ட் டிவி மிகமுக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், எஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம், கூகுள் அசிஸ்டென்ட், க்ரோம்காஸ்ட் உள்ளிட்ட சிறப்பான ஆதரவுகள் உள்ளது.

டிசிஎல் நிறுவனத்தின் புதிய 85-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை?

மற்ற ஸ்மார்ட் டிவிகளை விட இந்த 85-இன்ச் பி8எம் 4கே ஸ்மார்ட் டிவி மாடலின் மென்பொருள் அமைப்பிற்கும், பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டிசிஎல் நிறுவனத்தின் புதிய 85-இன்ச் பி8எம் 4கே ஸ்மார்ட் டிவியின் விலையைப் பொறுத்தவரை ரூ.1,99,990-ஆக உள்ளது. விரைவில் ஆன்லைன் தளத்தில் இந்த டிவி மாடல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
TCL 85-inch P8M 4K AI Android 9 TV launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X