யாரு சொன்னா 55-இன்ச் Google TV வாங்க ரூ.50000 ஆகும்னு.. ரூ.24,999 போதும்.. 24W சவுண்ட், 4K டிவி!
2026 பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஏற்கனவே பல வகையான ஸ்மார்ட் டிவிகளின் விலைகள் சரிந்து விட்டன. ஒருவேளை நீங்கள் 55-இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க வேண்டும் என்கிற யோசனையில் இருந்தால்.. உங்கள் பட்ஜெட் ரூ.25,000 என்றால்.. நேராக பிளிப்கார்ட் வலைத்தளத்திற்கு செல்லவும்.
ஏனென்றால் அங்குதான் டிசிஎல் (TCL) நிறுவனத்தின் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது அபாரமான டிஸ்கவுண்ட்டை பெற்று வெறும் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. அது 55-இன்ச் டிசிஎல் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (55 inch TCL Ultra HD 4K LED Smart Google TV 2025 Edition) மாடல் ஆகும்.

இந்த மாடலின் எம்ஆர்பி ரூ.66,599 ஆகும். இருப்பினும் 62% சிறப்பு தள்ளுபடியை பெற்று ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. எச்விஏ பேனல் மற்றும் மெட்டாலிக் பெசல்லெஸ் டிசைன் உடன் வரும் இந்த டிசிஎல் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 24W சவுண்ட் அவுட்புட், MEMC, டால்பி விஷன் அட்மோஸ் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
65% தள்ளுபடியில் கிடைக்கும் 55-இன்ச் டிவி: பெஸ்டன் நிறுவனத்தின் 55 இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (BESTON 55 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition - BS55UGTV) ஆனது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் 65% டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.59,999 ஆகும். இருப்பினும் தற்போது இது 65% நேரடி தள்ளுபடியை பெற்று (அதாவது எந்த பேங்க் கார்டு சலுகையும் இல்லாமல்) நேரடியாகவே ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் சரியாக சொன்னால் ரூ.39,000 விலை குறைப்பை பெற்றுள்ளது.
ஒருவேளை நீங்கள் இன்னும் பெரிய 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க விரும்பினால், பிளிப்கார்ட்டில் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் 65-இன்ச் 4கே ஸ்மாட் டிவி மாடல் ஒன்றின் மீது ரூ.24,610 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அது சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்பினிட்டி விஷன் 65 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 எடிஷன் மாடல் ஆகும்.
சாம்சங் நிறுவனத்தின் இந்த 65 இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.85,600 ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட்டில் இது 28% டிஸ்கவுண்ட்டை பெற்று, அதாவது ரூ.24,610 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.60,990 என்கிற சிறப்பு தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது
இந்த 65 இன்ச் சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்பினிட்டி விஷன் டிவியின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஸ்லிம் டிசைன் உடன் வரும் இந்த சாம்சங் டிவியானது 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling), எச்டிஆர் 10 பிளஸ் (HDR 10+) ஆதரவு, வாய்ஸ் அசிஸ்டென்ட்ஸ் ரிமோட் கண்ட்ரோல் (Voice Assistance Remote Control), சாம்சங் நாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security), 3டி சரவுண்ட் சவுண்ட் (3D surround sound) ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.
சாம்சங் மாடல் வேண்டாம் என்றால் 65 இன்ச் பிலிப்ஸ் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (PHILIPS 65 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition) மாடலை வாங்கலாம். இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி மடலின் எம்ஆர்பி ரூ.54,999 ஆகும். அதாவது ரூ.9000 விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








