Home
Gadgets

பழைய TV கதை முடிந்தது.. 35 சதவீத ஆஃபரில் 40 இன்ச் QLED டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

வீட்டில் இருக்கும் பழைய 32 இன்ச் டிவியை மாற்றிவிட்டு கொஞ்சம் பெரிய டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்கள் தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் டிசிஎல் 40 இன்ச் வி5சி சீரிஸ் கியூஎல்இடி டிவி (TCL 40 inch V5C Series QLED TV) மாடலை போட்டுப்போட்டு ஆர்டர் செய்து வருகின்றனர். இந்த டிசிஎல் டிவியின் விலை, பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் டிசிஎல் 40 இன்ச் வி5சி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி டிவி (40 inch V5C Series Full HD Smart QLED Google TV) மாடலுக்கு 35 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.20,990 விலைக்கு வாங்க கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, மேலும் மலிவாக இந்த டிவியை வாங்கலாம்.

பழைய TV கதை முடிந்தது.. 35 சதவீத ஆஃபரில் 40 இன்ச் QLED டிவி.. மாடல்?

டிசிஎல் 40 இன்ச் வி5சி சீரிஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (TCL 40 inch V5C Series QLED TV Specifications): 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த டிசிஎல் 40 இன்ச் வி5சி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுத்துள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் கிடைப்பதால், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கொடுத்துள்ளது. மேலும், பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை கொடுத்துள்ளது. வெப் பிரவுசர் (Web Browser), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) சப்போர்ட் கிடைக்கிறது.

மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் (Metallic Bezel-Less Design) கொண்ட 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த டிசிஎல் 40 இன்ச் வி5சி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது. மேலும், ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்துள்ளது. எச்டிஆர்10 (HDR 10) கொடுக்கப்பட்டு உள்ளது.

100 சதவீத கலர் வால்யூம் பிளஸ் (Color Volume Plus) மற்றும் 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் (Wide Viewing Angle) இந்த டிசிஎல் 40 இன்ச் வி5சி சீரிஸ் கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது. இதுபோக மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) சப்போர்ட் கொடுத்துள்ளது. 28W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. மேலும், டால்பி ஆடியோ (Dolby Audio) கிடைத்துள்ளது.

வை-பை 4 (Wi-Fi 4) மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 1 யுஎஸ்பி போர்ட் (USB Port), எல்ஏஎன் (LAN) மற்றும் டிஜிட்டர் ஆடியோ அவுட் (Digital Audio Out) கனெக்டிவிட்டிகள் இந்த டிசிஎல் 40 இன்ச் வி5சி சீரிஸ் கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது. மேலும், ஏவி இன் அடாப்டர் (AV IN Adapter), ஹெட்போன் ஜாக் (Headphone Jack) உள்ளது.

Best Mobiles in India

English summary
TCL 40 inch V5C Series Full HD Smart QLED Google TV 40V5C Available At 35 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X