Home
Gadgets

1.5ஜிபி ரேம், 24W ஸ்பீக்கர்கள்: பிரபல நிறுவனத்தின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு சலுகை வழங்கிய அமேசான்.!

இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பல முன்னணி சீன நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் சியோமி, ஒன்பிளஸ், சாம்சங், எல்ஜி, டிசிஎல் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் மிகவும் பிரபலமான நிறுவனத்தின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு அமேசான் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது டிசிஎல் 32-இன்ச் பெசல்-லெஸ் எஸ் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ரய்டு எல்இடி டிவி (32எஸ்5400ஏ) மாடலுக்கு தான் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.20,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பிரபல நிறுவனத்தின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு சலுகை வழங்கிய அமேசான்.!

ஆனால் அமேசான் தளத்தில் இந்த 32-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவிக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த TCL 32-inch Bezel-Less S Series HD Ready Smart Android LED TV மாடலை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த 32-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம்.

இப்போது டிசிஎல் 32-இன்ச் எஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த டிசிஎல் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 1366 x 768 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 ஆதரவு, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த டிசிஎல் 32-இன்ச் எஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவி ஆனது 64-பிட் குவாட்-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த டிவி ஆப்ஸ்களை தடையின்றி இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெசல்-லெஸ் டிசைன் கொண்ட இந்த டிசிஎல் 32-இன்ச் எஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த டிவியில் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் பிளே உள்ளிட்ட பல்வேறு வசதிகளைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவியின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பிரபல நிறுவனத்தின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு சலுகை வழங்கிய அமேசான்.!

1.5ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ரோம் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிசிஎல் 32-இன்ச் எஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், சன் என்எக்ஸ்டி, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த அட்டகாசமான டிவி வெளிவந்துள்ளது.

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான டிசிஎல் 32-இன்ச் எஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவி தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு ஏஐ பிக்சர் என்ஜிங், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TCL 32-inch S Series Smart TV is available at discounted price on Amazon:Check New Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X