Home
Gadgets

இந்தியாவில் புதிய 115 இன்ச் டிவி அறிமுகம்.. என்னென்ன அம்சங்கள்? விலையை சொன்னா நம்புவீங்களா?

டிசிஎல் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை விட சற்று குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகளை டிசிஎல் அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய 115 இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது டிசிஎல் நிறுவனம்.

குறிப்பாக இந்த டிசிஎல் 115 இன்ச் QD மினி எல்இடி டிவி (TCL 115 inch QD Mini LED TV) ஆனது தற்போது இந்தியாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. இப்போது இந்த டிவியின் விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் 115 இன்ச் டிவி அறிமுகம்.. விலையை சொன்னா நம்புவீங்களா?

டிசிஎல் 115 இன்ச் QD மினி எல்இடி டிவி அம்சங்கள் (TCL 115 inch QD Mini LED TV specifications): 4கே ரெசல்யூஷன்(4K resolution) கொண்ட டிஸ்பிளே உடன் டிசிஎல் 115 இன்ச் QD மினி எல்இடி டிவி வெளிவந்துள்ளது. மேலும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate),எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி.

அதேபோல் எச்டிஆர்500 நிட்ஸ் (HDR5000 nits) பிரைட்னஸ், 20,000+ லோக்கல் டிம்மிங் ஜோன்ஸ் (dimming zones), 98 % டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut), டியூவி ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Blue light) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய 115 இன்ச் டிசிஎல் டிவி.

டி-ஸ்கிரீன் அல்ட்ரா டெக்னாலஜி ( T-Screen Ultra Technology) ஆதரவுடன் இந்த புதிய 115 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவி மேம்பட்ட திரை அனுபவத்தை வழங்கும். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் ஒரு மினி தியேட்டர் அனுபவத்தை வழங்கும் இந்த டிசிஎல் 115 இன்ச் QD மினி எல்இடி டிவி மாடல்.

AiPQ ப்ரோ பிராசஸர் உடன் டிசிஎல் 115 இன்ச் QD மினி எல்இடி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியை இயங்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த டிவியில் ONKYO 6.2.2 Hi-Fi ஆடியோ அமைப்பு உள்ளது. இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

கேம் மாஸ்டர் தொழில்நுட்பத்துடன் (Game Master technology) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது டிசிஎல் 115 இன்ச் QD மினி எல்இடி டிவி. குறிப்பாக இந்த டிவி மேம்பட்ட கேமிங அனுபவத்தை வழங்கும். அதுவும் ALLM (ஆட்டோ லோ லேட்டன்சி மோட்) உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்தியாவில் 115 இன்ச் டிவி அறிமுகம்.. விலையை சொன்னா நம்புவீங்களா?

மல்டி-வியூ 2.0 அம்சம் (Multi-View 2.0 feature) இந்த புதிய 115 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. பின்பு இந்த டிவி ஹோம்கிட் (HomeKit) மற்றும் ஏர்ப்ளே 2 ( AirPlay 2) ஐ ஆதரிக்கிறது. இதுதவிர பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய 115 இன்ச் டிவியில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் டிசிஎல் 115 இன்ச் QD மினி எல்இடி டிவியின் விலை ரூ.29,99,990-ஆக உள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா, அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இந்த டிவி விற்பனைக்கு வரும். குறிப்பான அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TCL 115-inch QD Mini LED TV launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X