Tata Sky Binge+ ஆண்ட்ராய்டு டிவி Set-Top Box இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

|

டாடா ஸ்கை நிறுவனம் இந்தியாவில் டாடா ஸ்கை Binge+ என்ற புதிய ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா ஸ்கை Binge+ செட்-டாப் பாக்ஸின் விலை வெறும் ரூ.5,999 மட்டுமே. தற்போது டாடா ஸ்கை Binge+ 30 நாள் இலவச சோதனை சந்தாவை வழங்குகிறது.

புதிய டாடா ஸ்கை Binge+

புதிய டாடா ஸ்கை Binge+

புதிய டாடா ஸ்கை Binge+ ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ், இப்போது நிறுவனத்தின் இணையதளத்தில், டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டாடா ஸ்கை எச்டி செட்-டாப் Binge+ ரெக்கார்டருடன் பட்டியலிடப்பட்டுள்ளது. செட்-டாப் பாக்ஸ் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் இயக்கப்படுகிறது மற்றும் கூகிள் வாய்ஸ் அசிஸ்டன்ட் தேடலுடன் செயல்படுகிறது.

ரூ.249 திட்டம்

ரூ.249 திட்டம்

இலவச சோதனைக் காலத்திற்குப் பிறகு, நுகர்வோர் மாதத்திற்கு ரூ.249 செலுத்த வேண்டும். டாட் ஸ்கை Binge+ செட்-டாப் பாக்ஸ் சந்தாதாரர்களுக்கு ஒரு சாதனத்தில் நேரடி டிவி மற்றும் OTT உள்ளடக்கம் இரண்டையும் பார்க்க அனுமதி வழங்குகிறது. செட்-டாப் பாக்ஸை இணையத்துடன் இணைப்பதன் மூலம் OTT உள்ளடக்கத்தைப் பயனர்கள் பார்வையிடலாம்.

அலைமோதும் கூட்டம்: ரூ.3,999-க்கு பக்கா ஸ்மார்ட் போன்: எந்த நிறுவனம் தெரியுமா?அலைமோதும் கூட்டம்: ரூ.3,999-க்கு பக்கா ஸ்மார்ட் போன்: எந்த நிறுவனம் தெரியுமா?

OTT உள்ளடக்கம் உள்ளது

டாடா ஸ்கை நிகழ்ச்சிகளைத் தவிர, ஸ்ட்ரீமிங் சேவை ஜீ5, ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், ஈரோஸ் நவ், ஹங்காமா மற்றும் சன்நெக்ஸ்ட் பயன்பாடுகளிலிருந்து OTT உள்ளடக்கத்தை வழங்குகிறது. மேலும், டாட் ஸ்கை Binge+, டாடா ஸ்கை விஓடி நூலகத்திலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட தலைப்பு சேவைகளைச் சந்தாதாரர்களை வழங்குகிறது.

ஆண்ட்ராய்டு டிவி 9.0 பை

ஆண்ட்ராய்டு டிவி 9.0 பை

எஸ்.டி.பி அம்சங்களுடன் 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இது சமீபத்திய ஆண்ட்ராய்டு டிவி 9.0 பை இயங்குதளத்தில் இயக்குகிறது. பயனர்கள் 5000-க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் மற்றும் கேம்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். டாடா ஸ்கை Binge+ செட்-டாப் பாக்ஸ் சாதனத்தில் கூகுள் அசிஸ்டன்ட் சேவைக்கான கூகுள் அசிஸ்டன்ட் பட்டனுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Tata Sky Binge+ Android TV set-top box launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X