Home
Gadgets

டேக் லூப் வயர்லெஸ் ஸ்பீக்கர்: அறைக்கு உள்ளே பயன்படுத்த சிறந்தது.!

இது ஒரு பவர் பேங்க் போன்ற செயல்பாட்டையும் கொண்டுள்ளது. இந்த வகையில், நீங்கள் இசையைக் கேட்டு கொண்டிருக்கும் போதே, சார்ஜிங் செய்ய முடிகிறது.

By Jijo Gilbert

ரூ.2,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர்கள், டேக் நிறுவனத்தின் இணையதளத்திலும் Amazon.in-லும் விற்பனை செய்யப்படுகிறது.

டேக் லூப் வயர்லெஸ் ஸ்பீக்கர்: அறைக்கு உள்ளே பயன்படுத்த சிறந்தது.!


வயர்லெஸ் சாதனங்கள் மூலம் நம் வாழ்க்கையே மிகவும் எளிதாகிவிட்டது. ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தப்படியாக, வயர்லெஸ் ஹெட்போன்கள், ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் மற்றும் பவர் பேங்க் ஆகியவை அன்றாட தேவைகளாக மாறிவிட்டன. இந்த வகையில், நவீன உலகில் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த வரிசையில் உட்படும் டேக் லூப் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் ரூ.2,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு, டேக் நிறுவனத்தின் இணையதளத்திலும் Amazon.in-லும் விற்பனை செய்யப்படுகிறது.

உள்ளூரைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகத்தை தயாரிக்கும் பிராண்டான டேக் வெளியிட்டுள்ள இந்த லூப் வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் வி4.0 இல் இயங்குவதோடு, பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. தங்களின் முதல் ப்ளூடூத் ஆடியோ ஸ்பீக்கரை வெளியிட்டுள்ள இந்நிறுவனம், ஆடியோ விரும்பிகள் மற்றும் திரைபட விரும்பிகளுக்கு ஏற்றதாக அமையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டேக் லூப் வயர்லெஸ் ஸ்பீக்கர்: அறைக்கு உள்ளே பயன்படுத்த சிறந்தது.!


வடிவமைப்பு:

வெளிப்புற பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல
இந்த ஸ்பீக்கர்கள் வளைந்த முனைகளைக் கொண்ட வடிவத்துடன் காணப்படுகிறது. இதன் பொருட்களில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் உருக்கு மூலம் உருவாக்கப்பட்டு உள்ளன. இதனால் இவை ஐபி மதிப்பீட்டில் வருவது இல்லை. போர்ட்களை மூடிய வகையில் எந்த விதமான கவர்களும் இல்லை. எனவே நீர் மற்றும் மாசு உடன் தொடர்பு ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டியுள்ளது.

இதன் பின்பகுதியில் இணைப்பு அம்சங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. 3.5 மிமீ ஆடியோ ஜெக், யூஎஸ்பி ஸ்லாட், மைக்ரோஎஸ்டி ஸ்லாட் உடன் ஆன்/ ஆஃப் பொத்தான் ஆகியவை உள்ளன. கருப்பு நிறத்தில் மட்டுமே இந்த ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. மற்ற நிற வகைகளும் இருந்திருந்தால் வரவேற்கத்தக்கது.


ஸ்பீக்கரின் மேற்பகுதியில் செயல்பாட்டு பொத்தான் அளிக்கப்பட்டு உள்ளதோடு, அவை ஒன்றிற்கொன்று வேறுபாட்டை பெற்றுள்ளன. 0.5 கிலோ எடைக் கொண்ட இந்த ஸ்பீக்கர், இதே விலை நிலவரத்தில் உள்ள மற்ற ஸ்பீக்கர்களை விட எடைக் கொண்டதாகத் தெரிகிறது. சுருக்கமாக கூறினால், இதை வெளியிடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டுமானால், உங்களுக்கு வேறு பல அம்சங்களும் தேவைப்படுகிறது. இது வீட்டிற்குள் வைத்து பயன்படுத்தும் வகையில் உள்ளது. ஏனெனில் ஸ்பீக்கரில் எங்கேயும் பிடிப்பு போன்ற அம்சம் இல்லை. மேலும் வழக்கமான பயணங்களுக்கு, சற்று எடைக் கூடியதாகத் தெரிகிறது.

டேக் லூப் வயர்லெஸ் ஸ்பீக்கர்: அறைக்கு உள்ளே பயன்படுத்த சிறந்தது.!


அம்சங்கள் மற்றும் சிறப்புகள்:
இந்த டேக் லூப் ஸ்பீக்கர், ப்ளூடூத் வி4.0 இல் இயங்குகிறது. ஸ்மார்ட்போன்கள் உடன் இணைக்கும் போது, எந்த விதமான இணைப்பு பிரச்சனையும் நான் எதிர்கொள்ளவில்லை. இந்த ஸ்பீக்கர் மூலம் மொத்தம் 16 டபிள்யூ (2 x 8 டபிள்யூ) ஆற்றல் வெளியீடு கிடைக்கிறது.

உயர்ந்த ஒலி நிலைகளில், ஸ்பீக்கர்களில் இருந்து அதிக சத்தமான ஆடியோ வெளியீடு கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கர்கள் சார்ஜிங் செய்ய, மைக்ரோ யூஎஸ்பி ஸ்லாட்டை பயன்படுத்துவதோடு, 2,400 எம்ஏஹெச் பேட்டரியைக் கொண்டுள்ளது. 100 சதவீதம் சார்ஜ் ஆக, 2 முதல் 3 மணிநேரங்கள் வரை எடுத்து கொண்டு, 60 சதவீதம் ஒலி அளவில், 4 மணிநேரம் வரை இசையை வழங்குகிறது.

டேக் லூப் வயர்லெஸ் ஸ்பீக்கர்: அறைக்கு உள்ளே பயன்படுத்த சிறந்தது.!


பவர் பேங்க் போல இரட்டிப்பு திறன்
இது ஒரு பவர் பேங்க் போன்ற செயல்பாட்டையும் கொண்டுள்ளது. இந்த வகையில், நீங்கள் இசையைக் கேட்டு கொண்டிருக்கும் போதே, சார்ஜிங் செய்ய முடிகிறது. இது போன்ற செயல்பாட்டை கொண்ட மற்ற சாதனங்கள் உடன் பெரிய அளவிலான ஒரு பேட்டரியைப் பெற்றிருக்கும் நிலையில், இது சாதனத்தில் மட்டுமே சார்ஜிங் செய்து கொள்வது வியப்பு அளிக்கிறது.

இந்த ஸ்பீக்கர்களில் 3.5 மிமீ ஆடியோ ஜெக் உடன் கூடுதல் ப்ளேபேக் ஆதரவிற்காக மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்டை பெற்று உள்ளது. டேக் லூப் ஸ்பீக்கர்களில், தரமான மைக்ரோயூஎஸ்பி சார்ஜிங் ஸ்லாட் காணப்படுகிறது. இந்த ஸ்பீக்கர்களில் உள்கட்டமைப்பான முறையில் மைக் காணப்படுவதால், கைகளில் எடுக்காமல் அழைப்புகளைப் பேச முடிகிறது. அழைப்புகளை எடுக்கவும், செய்யவும் எந்த விதமான பிர்சசனைகளும் ஏற்படுவதில்லை. ஆடியோ தரம் மிக சிறப்பாக உள்ளது.

செயல்பாடு:
ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்த சாதனம் 2 x 8 டபிள்யூ ஸ்பீக்கர்களை பயன்படுத்தி, 16 ஆம்ஸ் வெளியீட்டை அளிக்கிறது. இந்த ஸ்பீக்கர் 100 சதவீத ஒலி அளவில், மிகவும் சத்தமாகவும் சிறந்த பாஸும் வெளியிடுகிறது. ஐபி மதிப்பீடு கொண்டதாக இந்த ஸ்பீக்கர் வந்திருந்தால், இது ஒரு சிறந்த தேர்வாக அமைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. டெஸ்க் ஸ்பீக்கராக வைக்கப்பட்டு, அதிக ஒலி வெளியீடு மற்றும் சிறந்த பாஸ் ஆகியவற்றை எதிர்பார்த்தால், இது ஒரு சிறந்த முதலீடு எனலாம்.

டேக் லூப் வயர்லெஸ் ஸ்பீக்கர்: அறைக்கு உள்ளே பயன்படுத்த சிறந்தது.!


முடிவு:
ஒரு எடுத்துச் செல்லக் கூடிய டெஸ்க் ஸ்பீக்கராக டேக் லூப் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்பீக்கரின் ஒலி வெளியீடு சத்தமாக இருப்பதோடு, சிறப்பான பாஸும் கிடைக்கிறது. கூடுதல் பாதுகாப்பிற்கான ஐபி மதிப்பீடு மட்டும் இல்லை என்பது ஒன்றே இதன் பின்னடைவு ஆகும். அறைக்குள் பயன்படுத்த எடுத்து செல்லும் வகையிலான ஒரு ஸ்பீக்கரை நீங்கள் விரும்பினால், இந்த ஸ்பீக்கர் கட்டாயம் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும்.

Best Mobiles in India

English summary
Tagg Loop wireless speakers review Speaker that doubles up as a power bank:Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X