டேக் நிறுவனத்தின் புதிய சோனிக் ஆங்கிள் 1 ஸ்பீக்கர் அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா?
ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் விற்பனை இந்திய சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் விற்பனை இந்திய சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்கள் பல புதிய ஸ்பீக்கர்களை சந்தைக்கு இறக்கினாலும், குறைந்த விலையில் நிறைய அம்சங்களுடன் இருக்கும் தயாரிப்புகளுக்கே இந்திய சந்தையில் இடமிருக்கிறது. அந்த வரிசையில் குறைந்த பட்ஜெட் விலைக்கு அட்டகாசமான ஸ்பீக்கர் ஐ வெளியிட்டிருக்கிறது டேக் நிறுவனம்.

பட்ஜெட் விலையில் உங்களுக்கு ப்ளூடூத் தொழிநுட்பத்துடன், ஸ்பிளாஷ் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் சந்தித்தலுடன் அட்டகாசமான ஸ்பீக்கர் கொடுத்தால் நீங்கள் வேண்டாமென்று சொல்வீர்களா.

சோனிக் ஆங்கிள் 1 ஸ்பீக்கர்
இந்திய நிறுவனமான டேக் நிறுவனம் தனது தயாரிப்புப் பிரிவை விரிவுபடுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய சோனிக் ஆங்கிள் 1 ஸ்பீக்கர் ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சோனிக் ஆங்கிள் 1 ஸ்பீக்கர் 2,499 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் மற்றும் ஃப்ளிப் கார்ட் போன்ற வலைத்தளங்கள் மற்றும் டேக் நிறுவனத்தின் வலைத்தளத்தில் கிடைக்கிறது.

பாஸ் ரேடியேட்டர் ஸ்பீக்கர்
இந்த புதிய சோனிக் ஆங்கிள் 1 ஸ்பீக்கர், ப்ளூடூத் வி4.2 தொழில்நுட்பத்துடன் கூடிய வயர்லெஸ் மற்றும் வயர்டு இணைப்புடன் களமிறங்கியுள்ளது. சோனிக் ஆங்கிள் 1 ஸ்பீக்கர் மேம்படுத்தப்பட்ட 50mmx80mm பாஸ் ரேடியேட்டர் கொண்டிருக்கிறது, இது மேம்பட்ட பாஸ் சேவையுடன் ஒலித் தன்மையை மேம்படுத்துகிறது.

ஸ்பீக்கர் ஃபோன் வசதி
சோனிக் ஆங்கிள் 1 ஸ்பீக்கர் மேம்பட்ட ஒலி தரத்திற்கான இரண்டு ஸ்பீக்கர் ஸ்டீரியோ இணைப்பை ஆதரிக்கிறது. இது ஆப்பிள் இன் சிறி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் செயலிகளுக்குக் குரல் ஆதரவு தருகிறது. இந்த டேக் ஸ்பீக்கர் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் ஃபோன் வசதியுடன் வருகிறது, இது பயனர்களுக்கு அழைப்புகளுக்கு வாய்ஸ் ரிப்ளை செய்ய அனுமதிக்கிறது.

ஸ்பிளாஷ் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ்
சோனிக் ஆங்கிள் 1 ஸ்பீக்கர், 2200எம்எஎச் ரிச்சார்ஜபிள் பேட்டரி மூலம் தொடர்ந்து 10 மணி நேரம் வரை இசை சேவை வழங்க முடியும். டேக் ஸ்பீக்கர் ஸ்பிளாஷ் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் IPX5 தரவரிசை சான்றுதலுடன் வருகிறது. சோனிக் ஆங்கிள் 1 ஸ்பீக்கர் முக்கோண வடிவமைப்பு மற்றும் மேட் பூச்சுடன் வருகிறது. டேக் ஸ்பீக்கர் 140x74x75mm அளவையும், 355 கிராம் எடையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications