Home
Gadgets

20,000mAh பவர் பேங்க் பட்ஜெட் விலையில் அறிமுகம்.! முழு விவரம்.!

இந்தியாவில் பவர் பேங்க் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மிகவும் பிரபலமான சிஸ்கா அக்ஸஸரீஸ் நிறுவனம் தனது புதிய சிஸ்கா பி 2024 ஜே பவர் பேங்க்கை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தை பிளிப்கார்ட் வலைத்தளம் மூலம் வாங்க முடியும்.

புதிய பவர் பேங்க

இந்த புதிய பவர் பேங்க ஆனது அனைத்து வகையான ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களை சார்ஜ் செய்ய பயன்படும்என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த வடிவமைப்புடன் இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

சிஸ்கா பி 2024 ஜே பவர்

சிஸ்கா பி 2024 ஜே பவர்

இந்த சிஸ்கா பி 2024 ஜே பவர் பேங்கின் உண்மை விலை ரூ.2499-ஆக உள்ளது. மேலும் மிட்நைட் ப்ளூ, பிளேஜிங் ரெட் மற்றும் பேர்ல் பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.

20,000 எம்ஏஎச் ஸ்டேபிள் திறன்

20,000 எம்ஏஎச் ஸ்டேபிள் திறன்

வெளிவந்த தகவலின்படி, சிஸ்கா பி 2024 ஜே ஜூம் சார்ஜிங் பவர் பேங்க் ஆனது 20,000 எம்ஏஎச் ஸ்டேபிள் திறன் கொண்டது. பின்பு இந்த பவர் பேங்க் ஒரே நேரத்தில் பல ஸ்மார்ட் சாதனங்களை ஒரே சீரான பாஸ்ட் சார்ஜிங் வேகத்துடன் சார்ஜ் வசதியை கொண்டுள்ளது.

சாதனம் 12-அடுக்கு சிப்

அதேபோல் இந்த சாதனம் 12-அடுக்கு சிப் பாதுகாப்பு மூலம் பாதுகாப்பான சார்ஜிங்கை வழங்குகிறது. பின்பு இந்த பவர் பேங்க் ஒரு பில்ட் இன் இன்டெலிஜென்ட் கண்ட்ரோல் சர்க்யூட்டை உள்ளடக்கியது, இது பவர் பேங்க் செல்ப்-சார்ஜிங் மற்றும் ஒரே நேரத்தில் பவரை வெளியிடும் போது பாதுகாப்பை உறுதி செய்கிறது.

குறிப்பாக ஒரே நேரத்தில் சார்ஜ் அனைத்து சாதனங்களையும் சார்ஜ் செய்யும் போது, சமமான வெளியீட்டைப் பெறுவதையும், உங்கள் சாதனங்களை விரைவாக சார்ஜ்செய்ய மின்னோட்டத்தின் வேகத்தை உறுதிப்படுத்துவதையும் இந்த பவர் பேங்க் உறுதி செய்கிறது.

டைப்-சி போர்ட்

மேலும் இந்த புதிய பவர் பேங்க் சாதனம் எல்இடி இன்டிகேட்டர், மைக்ரோ யுஎஸ்பி இன்புட், மைக்ரோ யுஎஸ்பி அவுட்புட் மற்றும் டைப்-சி போர்ட் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளத. இது அனைத்து வகை சாதனங்களையும் சார்ஜ் செய்வதை இன்னும் எளிதாக்குகிறது.

 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

இந்த சாதனம் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது. பின்பு 3 போர்ட்கள் மூலம் 3 சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சிஸ்கா பி 2024 ஜே பவர் பேங்க்

Best Mobiles in India

English summary
Syska 20,000mAh power bank Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X