Home
Gadgets

40h playback வழங்கும் புதிய நெக்பேண்ட் இயர்போன் மலிவு விலையில் அறிமுகம்.!

தற்போது இந்தியாவில் நெக்பேண்ட் இயர்போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதாவது கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்லும் ஐ.டி ஊழியர்கள் வரை அனைவரும் இந்த நெக்பேண்ட் இயர்போன் மாடல்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

 Neckon 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன்

Neckon 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன்

குறிப்பாக இந்தியாவில் நெக்பேண்ட் இயர்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் சில முன்னணி நிறுவனங்கள் கம்மி விலையில் நெக்பேண்ட் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் ஸ்வாட் நிறுவனம் இந்தியாவில் புதிய Neckon 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.

கிரிக்கெட் வீரர்?

கிரிக்கெட் வீரர்?

குறிப்பாக ஸ்வாட் நிறுவனம் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது. அதேபோல் இந்த புதிய நெக்பேண்ட் இயர்போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

HD ஸ்டீரியோ சவுண்ட்

HD ஸ்டீரியோ சவுண்ட்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நெக்கான் 102 நெக்பேண்ட் இயர்போன் ஆனது 10mm டிரைவர் கொண்டிருக்கிறது. மேலும் இது HD ஸ்டீரியோ சவுண்ட், புதுவிதமான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த இயர்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமிங் அனுபவத்தை மேம்படுத்திக் கொடுக்கும்

கேமிங் அனுபவத்தை மேம்படுத்திக் கொடுக்கும்

குறிப்பாக இந்த புதிய சாதனத்தில் 45ms லோ-லேடன்சி கேமிங் மோட் உள்ளது. இது கேமிங் அனுபவத்தை மேம்படுத்திக் கொடுக்கும். மேலும் இந்த இயர்போன் சிலிகான் மூலம் மென்மையாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இயர்போனை அதிக நேரம் பயன்படுத்தினாலும் எவ்வித அசவுகரியத்தையும் ஏற்படுத்தாது.

வலிமையான டிசைன்

வலிமையான டிசைன்

அதேபோல் இந்த சாதனம் வலிமையான டிசைன் கொண்டிருப்பதால் உடற்பயிற்சிகளின் போது இந்த நெக்பேண்ட் எந்தவித தொந்தரவையும் ஏற்படுத்தாது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 40 நிமிடங்களில்..

40 நிமிடங்களில்..

SWOTT Neckon 102 நெக்பேண்ட் இயர்போனை 40 நிமிடங்களில் முழுமையாகச் செய்துவிட முடியும். பின்பு இதை ஒருமுறை முழுமையாகச் செய்தால் சுமார் 40 மணி நேரத்திற்குப் பயன்படுத்தலாம் என நிறுவனம் கூறுகிறது.

கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி

கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி

இந்த நெக்பேண்ட் இயர்போனின் பவர் பட்டனை இரண்டு நொடிகள் அழுத்திப்பிடித்தால் கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி சேவையை இயக்கலாம். பின்பு இதன் இயர்பட்களில் காந்த சக்திகொண்ட மெட்டல் உள்ளது. அதேபோல் ப்ளூடூத் 5 மற்றும் டூயல் பேரிங் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளதுஸ்வாட் நெக்பேண்ட் இயர்போன்.

நெக்கான் 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் விலை

நெக்கான் 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் விலை

பிளாக் மற்றும் கிரே நிறங்களில் ஸ்வாட் நெக்கான் 102 ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த இயர்போன் ரூ.899-விலையில் வாங்கக் கிடைக்கும். குறிப்பாக அமேசான் மற்றும் ஸ்வாட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த இயர்போன் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
SWOTT Neckon 102 neckband earphone with 40 hours of playback launched at Rs.899: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X