800 ட்ரோன்கள் படைதிரண்டு வானில் பிரம்மாண்ட விமானம் உருவாக்கம்! வைரல் வீடியோ.!

|

அது ஒரு பறவையா? விமானமா? இரண்டுமே இல்லை. 800 ட்ரோன்கள் ஒன்று சேர்ந்து வானில் ஒரு பெரிய விமானத்தின் வடிவத்தில் ஒளிர்ந்து காண்போரை பிரம்மிக்க வைத்தன.

விமான மாநாட்டில்

இந்த ஆண்டு நாஞ்சாங் விமான மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், மற்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு மத்தியில் 800 ட்ரோன்கள் ஒன்றாக இணைந்து வானில் ஒரு பெரிய விமானத்தை உருவாக்கியதை கண்டுகளித்தனர்.

வேறலெவல் ஏர் ஷோ

அதிநவீன விமான போக்குவரத்து, விண்வெளி பயணம் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டு பார்வையாளர்களைக் கவரும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ட்ரோன் நிகழ்வு நிகழ்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது என்றால் மிகையாகாது. ட்ரோன்கள் இந்த ஏர் ஷோவை இறக்கை உள்ள புரோபல்லர் விமானத்தை உருவாக்கி துவங்கி வைத்ததுடன், அவை ஒரு பிரம்மாண்ட விமானமாகவும் உருமாறின. மேலும் இந்த ட்ரோன்கள் ஒரு ஹெலிகாப்டர் வடிவத்தை உருவாக்கியதுடன், ஒரு விண்கலமாக தோன்றி பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்தன.

ஜெட் மற்றும் வணிக விமானங்கள்

ஜெட் மற்றும் வணிக விமானங்கள்

ஜெட் மற்றும் வணிக விமானங்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட விமானங்களை உள்ளடக்கிய வார இறுதி நாள் நிகழ்வின் முடிவில் இந்த கண்கவர் நிகழ்வை விழா அமைப்பாளர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர். சீனாவிற்கு அதிக முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்குடன் நாஞ்சாங்கில் உள்ள விமானத் தொழில்துறையை காண்பிப்பதே இந்த மாநாட்டின் நோக்கம். இந்த நிகழ்வின் போது, ​​பார்வையாளர்களுக்கு விமான நிகழ்ச்சி, விண்கல நிகழ்ச்சி மற்றும் ட்ரோன் அணிவகுப்பு என கண்களுக்கு விருந்தளித்தது.

 ட்ரோன் தொழில்நுட்பத்தின் மேம்பாடுகள்

ட்ரோன் தொழில்நுட்பத்தின் மேம்பாடுகள்

ட்ரோன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் ஆராய்ச்சியாளர்களுடன் தொழில்நுட்ப நிறுவனங்களும் அரசாங்கங்களும் இணைந்து தங்கள் திறன்களை முன்னேற்றுவதற்காக செயல்பட்டு வருகின்றன. எந்தளவிற்கு முன்னேற்றம் ஏற்படுகின்றதோ அதற்கேற்ப வரும் ஆண்டுகளில் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் ட்ரோன்கள் மாறும் வாய்ப்பு அதிகம்.

காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.!காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.!

காட்சிக்கு வைக்கப்பட்டன

அக்டோபர் மாத பிற்பகுதியில் மேம்பட்ட ட்ரோன்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில் நெதர்லாந்தில் உள்ள டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள் குழு உருவாக்கிய வழிமுறையின்(அல்காரிதம்) மூலம், மினி ட்ரோன்களின் திரளாக ஒன்று சேர்ந்து பயணிக்க உதவுகிறது. இந்த வழிமுறையைப் பயன்படுத்தி, ட்ரோன்கள் மாதிரி தேடல் மற்றும் மீட்பு பணியை மேற்கொள்ள முடிந்தது. இது பொதுவாக அதிக சென்சார்களைக் கொண்ட பெரிய ரோபோக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று. இந்த வழிமுறையின் உதவியுடன் ட்ரோன்கள் ஒரு தொகுப்பாகவும் செல்ல முடியும்.

ட்ரோன்கள்

ட்ரோன்கள் ஒன்றாக பயணிப்பதன் மூலம் பெரிய கிடங்குகளில் இருப்பை கண்காணிக்கவும், தொழில்நிறுவனங்கள் அல்லது தொழில்துறை ஆலைகளை கண்காணிப்பது போன்றவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கும். வானத்தில் ஒளிரும் விமானத்தை உருவாக்குவதன் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் உள்ளத்தை பறித்ததையும் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
A Swarm of 800 Drones Create a Giant Airplane in the Sky : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X