இயர்பட்ஸ் வாங்கும் பிளான் இருக்கா? கொஞ்சம் வெயிட் பண்ணா இந்த OnePlus Buds-ஐ வாங்கலாம்!

|

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின ஸ்மார்ட்டிவி, ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் போன்ற பல சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ

அதாவது தனித்துவமான அம்சங்களுடன் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்ட சாதனங்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்வதால் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் ஏற்கனவே ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிளாக்ஷிப் தர ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் என்று கூறப்படுகிறது.

iPhone SE 3 மீது மொத்தமாக ரூ.21,960 பிரைஸ் கட்.! கம்மி விலையில வாங்க என்ன செய்யணும்?iPhone SE 3 மீது மொத்தமாக ரூ.21,960 பிரைஸ் கட்.! கம்மி விலையில வாங்க என்ன செய்யணும்?

 புதிய பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

புதிய பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

மேலும் தற்போது இந்த மாடலின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த பிரபலமான Samsung போன் உங்க கிட்ட இருக்கா? அப்போ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்இந்த பிரபலமான Samsung போன் உங்க கிட்ட இருக்கா? அப்போ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்

முகுல் ஷர்மா

குறிப்பாக இந்த புதிய இயர்பட்ஸ் உற்பத்தி நிலையில் எட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இதன் உற்பத்தி ஆசியா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தெரிவித்துள்ளார்.

நவ.15 க்கு பிறகு.. நினைத்தாலும் கூட இந்த Phone-களை இவ்ளோ கம்மி விலைக்கு வாங்க முடியாது! ஏன்?நவ.15 க்கு பிறகு.. நினைத்தாலும் கூட இந்த Phone-களை இவ்ளோ கம்மி விலைக்கு வாங்க முடியாது! ஏன்?

ஒன்பிளஸ் 11

அதேபோல் இந்த புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் ஆனது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த இயர்பட்ஸ். மேலும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

எல்லாம் NOKIA மயம்.. டாப் 6 பீச்சர் போன்களின் பட்டியலில் எல்லாமே நோக்கியா தான்.. இதோ லிஸ்ட்!எல்லாம் NOKIA மயம்.. டாப் 6 பீச்சர் போன்களின் பட்டியலில் எல்லாமே நோக்கியா தான்.. இதோ லிஸ்ட்!

6எம்எம் டூயல் ஆடியோ டிரைவர்கள்

6எம்எம் டூயல் ஆடியோ டிரைவர்கள்

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலில் இன்-இயர் டிசைன் மற்றும் சிலிகாம் டிப்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 11எம்எம் மற்றும் 6எம்எம் டூயல் ஆடியோ டிரைவர்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2

இந்த ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலுக்கு வழங்கப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி, 45db வரை நாய்ஸ் ரிடக்‌ஷன் வசதியை வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த இயர்பட்ஸ் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆம்பியண்ட் மோட்

ஆம்பியண்ட் மோட்

டாப் எண்ட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களில் இருக்கும் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஆம்பியண்ட் மோட் போன்ற அம்சங்கள் இந்த புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலிலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும் Samsung-ன் பிரபல 5G ஸ்மார்ட்போன்! என்ன மாடல்?வெறும் ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும் Samsung-ன் பிரபல 5G ஸ்மார்ட்போன்! என்ன மாடல்?

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல்

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல்

இதுதவிர ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட் உடன் இந்த ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஒரு தரமான இயர்பட்ஸ் மாடலை வாங்க விரும்பும் பயனர்கள் இந்த ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் அறிமுகமாகும் வரை காத்திருக்கவும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Successor of Original OnePlus Buds Pro all set to Launch in Early 2023 Check Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X