ரூ.16,000-க்கு கீழ் அசத்தலான 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க விருப்பமா? இதோ பட்டியல்.!
இந்தியாவில் சாம்சங், எல்ஜி, சோனி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு 43-இன்ச், 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. ஆனால் இந்நிறுவனங்கள் சற்று உயர்வான விலையில் தான் 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன.
இருந்தபோதிலும் இந்தியாவில் சில நிறுவனங்கள் கம்மி விலையில் தரமான 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகின்றன. அதன்படி இப்போது ரூ.16,000-க்கு கீழ் கிடைக்கும் 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி
இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.15,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி அம்சங்கள்
இன்பினிக்ஸ் 43Y1 ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 1,920x1,080 பிக்சல்ஸ், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குவாட்-கோர் பிராசஸர் உடன் மாலி-ஜி31 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த Infinix 43Y1 மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி 4ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.
டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் டிவி. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இந்த ஸ்மார்ட் டிவியில் யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5, ஈரோஸ் நவ், ஹங்காமா உள்ளிட்ட பல ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். வைஃபை, லேன், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், AV இன்புட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Infinix 43Y1 ஸ்மார்ட் டிவி.

40-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி
40-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஃபுல் எச்டி எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,999-க்கு வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. எனவே சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். பின்பு கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
அதேபோல் ARM Cortex-A53 பிராஸசர் வசதி, 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி. பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம், வைஃபை ஆதரவு,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த 40-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
40-இன்ச் iFFALCON by TCL ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் தளத்தில் 40-இன்ச் iFFALCON by TCL ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ரூ.15,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.
மேலும் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, 1ஜிபி ரேம், எச்டிஆர் ஆதரவு, வைஃபை ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு இந்த 40-இன்ச் iFFALCON by TCL ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

43-இன்ச் VW ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
அமேசான் தளத்தில் 43-இன்ச் VW ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல் ரூ.15,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி குவாட்-கோர் பிராசஸர், எச்டிஆர் 10 ஆதரவு, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை ஆதரவு, லேன் ஆதரவு உள்ளிட்ட பல முக்கியமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
40-இன்ச் Candes ஸ்மார்ட் டிவி
அமேசான் தளத்தில் 40-இன்ச் Candes எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை ரூ.14,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட். வைஃபை ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








