Home
Gadgets

Mobile மட்டுமில்லை Laptop-ஐ கூட சார்ஜ் செய்யலாமா? 20,000mah பவர் பேங்க் விலை இவ்வளவு தானா?

ஸ்மார்ட்போன்களுக்காக பவர் பேங்க் சாதனம் வாங்குவதெல்லாம் அந்த காலம், இப்போது லேப்டாபிற்கே பவர் பேங்க் சாதனம் வந்துவிட்டது. எது லேப்டாப்பை சார்ஜ் செய்யும் அளவிற்கு பெரிய பவர் பேங்க் டிவைஸ் வந்துவிட்டதா? என்று கேட்டால்.. ஆம் என்பது தான் பதில்.

லேப்டாப்பிற்கே சார்ஜ் செய்ய வேண்டுமென்றால், இதன் சைஸ் மிகவும் பெரியதாக இருக்குமே என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அது அப்படி இல்லை. உங்கள் மொபைல் போன்களுக்காக நீங்கள் பயன்படுத்தும் நார்மல் பவர் பேங்க் சாதனங்கள் போல தான் இந்த டிவைஸும் தோற்றத்தில் காட்சியளிக்கும். ஆனால், இதன் சார்ஜிங் கெபாசிட்டி பல மடங்கு அதிகம்.

Mobile மட்டுமில்லை Laptop-ஐ கூட சார்ஜ் செய்யலாமா? 20000mah பவர் பேங்க்

லேப்டாப்பையே சார்ஜ் செய்யுமா இந்த புதிய Stuffcool Superpower 84W Power Bank!

இப்படி, இந்திய சந்தையில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் பவர் பேங்க் சாதனம் தான், Stuffcool நிறுவனத்தின் புத்தம் புதிய பவர் பேங்க் சாதனம். இந்த புதிய பவர் பேங்க் சாதனம் சூப்பர் பவர் 85W பவர்பேங்க் (Stuffcool Superpower 84W Power Bank) ஆகும். இது மிகப்பெரிய 20,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், இதன் ஒட்டுமொத்த சார்ஜிங் திறன் 20,000mah ஆற்றலை கொண்டுள்ளது.

இந்த ஸ்டஃப்கூல் சூப்பர் பவர் 84W பவர் பேங்க் சாதனத்தின் விலை என்ன? இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளது. இதை ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்தலாமா? இதில் லேப்டாப்பை எப்படி சார்ஜ் செய்வது என்பது போன்ற தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த 20,000 mah பவர் பேங்க் சாதனம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அணைத்து விவரங்களும் இங்கே.

லேப்டாப் மட்டுமில்லை இன்னும் பல சாதனங்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறதா?

அதிகாரப்பூர்வ குறிப்புகளின் அடிப்படையில், நிறுவனத்தின் சமீபத்திய பவர்பேங்க் ஸ்டஃப்கூல் பாம் அல்ட்ரா காம்பாக்ட் என்ற பவர் பேங்கின் வெளியீட்டிற்குப் பிறகு, உடனே விரைவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய சூப்பர் பவர் 85W ஆனது மேக்புக் அல்லது மற்ற லேப்டாப் சாதனங்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது USB டைப் சி போர்ட் மற்றும் டைப் சி1 போர்ட்டிலிருந்து நிண்டெண்டோ ஸ்விட்ச் கேமிங் கன்சோல்கள் இயக்கப்படும் அம்சத்துடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த பவர் பேங்க் சாதனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் iPhone மற்றும் பிற PD இணக்கமான சாதனங்களையும் இத்துடன் இணைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய 20,000mAh பேட்டரி பேக் பாஸ்ட் சார்ஜ் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இந்த சூப்பர் பவர் பேங்க் சாதனம் ஐபோனை வெறும் 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. Stuffcool இன் சூப்பர் பவர் இரண்டு வகை C போர்ட்களிலிருந்தும் பிரத்யேக வெளியீடுகளை வழங்குகிறது. இது 2 சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

அதாவது, ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை இரண்டு டைப் சி சார்ஜ் போர்ட் வழியாக சார்ஜ் செய்யலாம். இதில் உள்ள Type C1 போர்ட் 65W வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இது Samsung, Pixel மற்றும் பிற ஆண்ட்ராய்டு போன்களை சார்ஜ் செய்ய ஆதரிக்கிறது. அதே நேரத்தில் Type C2 போர்ட் வழியாக இது iOS சாதனங்களுக்கு 20W வரை சார்ஜிங்கை வழங்குகிறது.

இந்த பவர் பேங்க்கின் விலை என்ன?

ஸ்டஃப்கூல் சூப்பர் பவர் 20,000mah 85W பவர் பேங்க் இந்திய மதிப்பில் வெறும் ரூ. 4,990 என்ற விலைக்கு கிடைக்கிறது. இது ஒரு கருப்பு வண்ண விருப்பத்தில் மட்டுமே கிடைக்கிறது. முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது. எனவே பயணத்தின் போது லேப்டாப், நிண்டெண்டோ சுவிட்சை சார்ஜ் செய்ய விரும்புவோருக்கு, இந்த சாதனம் பெஸ்டான தேர்வு.

More from GizBot

Best Mobiles in India

English summary
Stuffcool Superpower 84W Power Bank Goes Sales On India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X