Home
Gadgets

சும்மா.. சில்லு சில்லுனு வீசும் காற்று.. அறிமுகமானது மூன்று ஏர் கூலர்கள்.. 3600mAh பேட்டரி.. எந்த மாடல்?

மொபைல் ஆக்சஸரீஸ் தயாரிப்பில் பிரபலமான ஸ்டஃப்கூல் (Stuffcool) நிறுவனம், இந்தியாவில் தனது முதல் ஸ்டேகூல் பர்சனல் கூலர் (Staycool Personal Cooler) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற வகையில், எளிமையான மற்றும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பயனுள்ள தொழில்நுட்பத்துடன் இந்த புதிய ஏர் கூலர் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுவும் டர்போ (turbo), டர்போ பிளஸ் (turbo+) மற்றும் மிஸ்ட் (mist) ஆகிய மூன்று கூலர் மாடல்கள் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த மூன்று ஏர் கூலர் மாடல்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அறிமுகமானது மூன்று ஏர் கூலர்கள்.. 3600mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஸ்டேகூல் டர்போ அம்சங்கள்: தினசரி பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட மினி ஏர் கூலராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சில்ஸ்பாட் (ChillSpot) செமிகண்டக்டர் கூலிங் தொழில்நுட்பம் மற்றும் 12,000 RPM வேகத்தில் இயங்கும் பிரஷ்லெஸ் மோட்டார் (Brushless Motor)கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றின் வேகத்தை 5 நிலைகளில் மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. அதாவது 5 ஸ்பீடு வசதி இதில் உள்ளது.

இந்த ஸ்டேகூல் டர்போ கூலரில் 2,400mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை கையில் பிடித்தும் அல்லது மேசையில் வைத்தும் பயன்படுத்தலாம். இதனால் வீட்டில் மட்டுமின்றி அலுவலகம் மற்றும் பயணங்களின்போதும் பயன்படுத்த ஏற்றதாக இருக்கும்.

ஸ்டேகூல் டர்போ பிளஸ் அம்சங்கள்: ஸ்டேகூல் டர்போ பிளஸ் மாடல் எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கக்கூடிய மடிக்கக்கூடிய கழுத்து (foldable neck) பகுதி உள்ளது. வெறும் 157 கிராம் எடை கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூலர் மாடல்களில் மிகவும் எடை குறைந்த மாடலாக உள்ளது இந்த ஸ்டேகூல் டர்போ பிளஸ் மாடல்.

இந்த ஸ்டேகூல் டர்போ பிளஸ் மினி கூலரில் Semiconductor Cooling Plate மற்றும் 5 வேகங்களில் காற்றை மாற்றும் (5 ஸ்பீடு) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3000mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பயணங்களின்போது எடுத்துச் சென்று பயன்படுத்துவதற்கு இது வசதியாக இருக்கும்.

ஸ்டேகூல் மிஸ்ட் அம்சங்கள்: இந்த ஸ்டேகூல் மிஸ்ட் என்பது இந்த மூன்று கூலர் மாடல்களிலும் அதிக வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலாகும். இதில் குளிர்ந்த காற்றுடன், குளிரூட்டும் மிஸ்ட் ஸ்ப்ரே வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிரித்து எடுக்கக்கூடிய மேக்னடிக் வாட்டர் டேங்க்(Magnetic Water Tank), 13,000 RPM வேகத்தில் இயங்கும் பிரஷ்லெஸ் மோட்டார் மற்றும் 3600mAh பேட்டரி ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக டர்போ, டர்போ பிளஸ் மற்றும் மிஸ்ட் ஆகிகய மூன்று மாடல்களிலும் 5 வேகங்களில் காற்றை மாற்றும் வசதி, பிரஷ்லெஸ் மோட்டார், எல்இடி ஸ்மார்ட் டிஸ்பிளே மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் வசதி ஆகியவை பொதுவாக வழங்கப்பட்டுள்ளன.

வெளியில் செல்லும்போது, பயணங்களின்போது, நீண்ட நேரம் அலுவலகத்தில் வேலை செய்யும்போது அல்லது வழக்கமான AC வசதி இல்லாத இடங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில், தினசரி தேவைக்கான தனிப்பட்ட குளிரூட்டும் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது இந்த முன்னணி நிறுவனம்.

விலை மற்றும் விற்பனை

  • ஸ்டேகூல் டர்போபர்சனல் கூலரின் விலை ரூ.1799-ஆக உள்ளது
  • டர்போ பிளஸ் மாடலின் விலை ரூ.2099-ஆக உள்ளது.
  • டர்போ பிளஸ் மினி கூலரின் விலை ரூ.2599-ஆக உள்ளது.
  • stuffcool.com மற்றும் முன்னணி ஆஃப்லைன் கடைகளில் இந்த புதிய ஏர் கூலர்கள் வாங்க கிடைக்கும்.

source 1

Best Mobiles in India

English summary
Stuffcool Introduces Staycool Turbo, Turbo Plus and Mist Personal Coolers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X