உஷார் : உளவு பார்க்கும் கேஜெட் தொழில்நுட்பம்.!!

Written By: Aruna Saravanan
  X

  உளவு பார்க்கும் நோக்கில் தொழில்நுட்பம் சார்ந்த கேஜெட்கள் அக்காலத்தில் இருந்து அறிவுபூர்வமான கண்டுபிடிப்புகளாக பார்க்கப்பட்டு வருகின்றது. அவற்றில் பல்வேறு கருவிகள் மற்றும் கேஜெட்கள் உலக போரின் போதும் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

  உளவு கேமரா மற்றும் பதிவு செய்யும் இயந்திரங்கள் என பல்வேறு பயன்பாடுகளை வழங்கும் கருவிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இங்கு உளவு பணிகளை மேற்கொள்ள உதவும் கேட்ஜட்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Lipstick Pistol

  இது பனி போரின் போது பயன்படுத்தப்பட்டது. இதை KGB ஏஜண்ட் பயன்படுத்தியது. வாஷிங்டன் அருங்காட்சியத்தில் இதை காட்சிக்கு வைத்திருந்தனர். இது 4.5 எம்எம் ஆயுதம் ஆகும். இது லிப்ஸ்டிக் போன்ற தோற்றத்தில் மறைந்துள்ள ஒரு கைத்துப்பாக்கி. இதை 'The Kiss of Death' என்றும் அழைக்கின்றனர்.

  Bulgarian Umbrella

  குடையில் மறைந்துள்ள இந்த துப்பாக்கியில் ரிசின் ( ricin ) அடங்கியுள்ளது. இது கொடிய விஷமாகும். இதை படுகொலைக்கு பயன்படுத்தியுள்ளனர். ஜியோர்கி மார்கௌவின் படு கொலையில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் லண்டன் தெருவில் நடந்து செல்லும் போது எதுவோ கடித்தது போன்று உணர்ந்துள்ளார் பிறகு இறந்து விட்டார். கடைசி வரை அவர் எப்படி இறந்தார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  Shoe With Heel Transmitter

  அக்கால ரோமாபுரியின் ரகசிய கருவியாக இது செயல் பட்டது. இதை அமெரிக்க உளவாளிகளின் கால் ஷூக்களில் அவர்களுக்கே தெரியாமல் பொருத்தி அவர்களின் நடவடிக்கைகளை ஆராய்வர். இதன் மூலம் அவர்களின் ரகசிய உரையாடல்கள் கண்காணிக்கப் பட்டது.

  Dragonfly Insectohopter

  இதை 1970 ஆம் ஆண்டு CIA கண்டுபிடித்தனர். மிகவும் சிறியதாக இருக்கும் இந்த தட்டான் இயந்திரம் கண்களுக்கு தென்பாடாத வண்ணம் பறந்து சென்று தகவல் சேகரித்து வருவதில் மண்ணன். கிராஸ் விண்ட்ஸ் இருக்கும் இடத்தில் இதனால் துல்லியமாக செயல் பட முடியாது என்பதால் இதை நிலப்பரப்புகளில் பயன்படுத்துவதில்லை. அக்காலக்கட்டத்தின் மிக சிறந்த கண்டுபிடிப்பாக இதை கொண்டாடினர்.

  The Enigma Machine

  முதல் உலக போரின் போது ஜெர்மன் பொறியாளர் Arthur Scherbius என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட குறியாக்கவியல் டிவைஸான cipher machine அக்காலக்கட்டத்தின் மிக பெரிய கண்டுபிடிப்பாகும். இந்த எனிக்மா மெஷின் சாதாரண தட்டச்சு போன்று இருந்தாலும் அதை விட கூடுதலான அம்சங்களை கொண்டது.
  இதன் கீ போர்ட் ஒரு சுழலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரிசை படுத்தவும், சரியாக மாற்றி அமைக்கவும், மெசேஜ் அனுப்பவதற்கும் பயன்படுகின்றது. இதில் மெசேஜை புரிந்து கொள்வதற்காக தேவையான இடைவெளியில் தேவையான கீக்களை கொண்டு மோர்ஸ் குறியீட்டில் செயல்படுத்தப்படுகின்றது.

  Glove Pistol

  இந்த துப்பாக்கியை பார்த்தால் James Bond கூட பொறாமை கொள்வார். கைகளை பயன்படுத்தாமலேயே சுடக் கூடிய துப்பாக்கி என்றால் உங்களுக்கு அதிசியமாக இல்லையா. இதை உறை பிஸ்டல் மூலமாக செய்ய முடியும். இதை அமெரிக்க கடற்படை கண்டுபித்துள்ளது.

  Ajoka Spy Sunglasses

  ஒவ்வொரு உளவாளியும் வாங்கக் கூடிய மிக முக்கியமான கருவியாக இந்த Ajoka Spy Sunglasses இருக்கின்றது. இதன் மூலம் நீங்கள் பார்க்கும் அல்லது கேட்கும் விஷயங்களை தெளிவாக பதிவு செய்ய முடியும். இதில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 2ஜிபி மெமரி (5மணிநேரத்திற்கு பதிவு செய்ய முடியும்) உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  முகநூல்

  மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  spy gadgets that will blow your mind Tamil.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more