வாட்டி வதைக்கும் வெயில்.. வீடு ஜில்லுன்னு இருக்க இந்த AC மாடல்களை வாங்குங்க.. சலுகை விலை.. எந்த மாடல்?
சமீபத்தில் கோடை மழை பெய்த நிலையில் தற்போது அதிக இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதுவும் கடந்த சில ஆண்டுகளாகப் பருவநிலை மாற்றம் காரணமாகக் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொழுத்த தொடங்கி விடுகிறது. முன்பு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தான் வெயிலின் தாக்கம் இருக்கும்.
ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதேபோல் வழக்கமான அக்னி நட்சத்திரம் தொடங்கி பின்னர் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் துவக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

குறிப்பாக தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏசி, ஏர் கூலர் போன்ற சாதனங்களை மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர். அதுவும் சில முன்னணி நிறுவனங்கள் இப்போது ஸ்ப்ளிட் ஏசி மாடல்களை சலுகை விலையில் விற்பனை செய்கின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் சலுகை விலையில் வாங்க கிடைக்கும் சிறந்த ஸ்ப்ளிட் ஏசி (AC) மாடல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.மார்க்யூ (MarQ) 1.5 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் இன்வெர்டர் 5-இன்-1 கன்வெர்ட்டபிள் ஏசி மாடல் ஆனது டர்போ கூல் டெக்னாலஜி ஆதரவுடன் வெளிவந்தது. குறிப்பாக இந்த மார்க்யூ ஸ்ப்ளிட் ஏசிர மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஏசி மாடலை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.
2.கோத்ரெஜ் (Godrej) 1 டன் 5-இன்-1 கன்வெர்ட்டபிள் கூலிங் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏசி மாடலுக்கு அமேசான் தளத்தில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.29,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசி மாடலை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஏசி மாடலை ரூ.26490 விலையில் வாங்கிவிட முடியும்.
3.ஒனிடா (ONIDA) 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் இன்வெர்டர் ஏசி (2025) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசி மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஏசி மாடலை ரூ.25990 விலையில் வாங்கிவிட முடியும்.

4.டிசஎல் (TCL) 5 ஸ்டெப் கன்வெர்ட்டபிள் 1 டன் 3 ஸ்டார் ஸ்ப்ளிட் இன்வெர்டர் ஏசி மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.28,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசி மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஏசி மாடலை ரூ.27,490 விலையில் வாங்கிவிட முடியும்.
5.சன்சோய் (Sansui) 1 டன் 3 ஸ்டார் ஜென் கூல் 5-இன்-1 கன்வெர்ட்டபிள் ஸ்ப்ளிட் ஏசி மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏசி மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஏசி மாடலை ரூ.26,990 விலையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications