Home
Gadgets

இது வெறும் பவர் பேங்க் இல்லை! 3 இன் 1 பவர் பேங்க்.! இது என்ன செய்யும் தெரியுமா?

இதுவரை நீங்கள் எத்தனையோ பவர் பேங்க் சாதனங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால், இப்படி ஒரு 3 இன் 1 சாதனத்தை நீங்கள் கட்டாயமாகப் பார்த்திருக்க முடியாது. ஆம், 1 அல்ல.. 2 அல்ல.. 3 விதத்தில் இந்த சாதனத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஒரு கட்டாய சாதனம் என்றால் அது பவர் பேங்க் சாதனம் தான். முந்தைய காலத்தில் வெளிவந்த மொபைல் போன்களில் இருந்த பேட்டரி சிறிய mah சக்தியுடன் இருந்தாலும் கூட, 2 அல்ல 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சார்ஜ் செய்தால் போதுமானதாக இருந்தது. ஆனால், இன்று நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

இது வெறும் பவர் பேங்க் இல்லை! 3 இன் 1 பவர் பேங்க்.! இது என்ன செய்யும்?

அடேங்கப்பா மிரட்டுதே.! ஒரு பவர் பேங்க் டிவைஸ்ல 3 வேலை செய்யலாமா?

இன்றைய ஸ்மார்ட் போன்களில் 5000mah அல்லது 7000mah பேட்டரி என்று பெரிய சைசில் பேட்டரிகள் வழங்கப்பட்டாலும், ஒரு நாளுக்கு ஒரு முறை அல்லது இரு முறையாவது நமது போனை சார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. இது பல நேரத்தில் கடுப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, நாம் வெளியில் செல்லும் போது ஸ்மார்ட்போனில் சார்ஜ் இல்லை என்றால், அன்றைய நாள் மோசமான நாள் போன்ற உணர்வு நம்மைச் சூழ்ந்துகொள்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் சிக்காமல் தப்பிக்க வேண்டுமென்றால், நம்மிடம் ஒரு பவர் பேங்க் சார்ஜ்ர் இருப்பது அவசியம். அதிலும், இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, நம்மிடம் வயர்லெஸ் மற்றும் வயர்டு ஆகிய இரண்டு சேவைகளை ஆதரிக்கும் பவர் பேங்க் சாதனம் இருந்தால், உங்கள் தினசரி வாழ்கை சூப்பர் டே-வாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் வாழ்க்கையை எளிமைப்படுத்த உருவாக்கப்பட்ட சாதனம் தான் இந்த புதிய Spigen 10000mAh 3 in 1 வயர்லெஸ் சார்ஜிங் பவர் பேங்க் சாதனமாகும். இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது 3 இன் 1 அம்சத்துடன் வருகிறது. இதை நீங்கள் வயர்லெஸ் பவர் பேங்க் சாதனமாக பயன்படுத்தலாம். இதை வயர்லெஸ் சார்ஜராகவும் பயன்படுத்தலாம் மற்றும் மொபைல் ஸ்டாண்ட் ஆகவும் பயன்படுத்தலாம்.

இது வெறும் பவர் பேங்க் இல்லை! 3 இன் 1 பவர் பேங்க்.! இது என்ன செய்யும்?

Spigen 3 இன் 1 பவர் பேங்க் சாதனத்தின் சிறப்பம்சம் என்ன?

சரி, வாருங்கள் இதன் விலை மற்றும் விபரங்களை பற்றி பார்க்கலாம். இந்த Spigen 3 இன் 1 சாதனம் 10000mah ஆற்றல் திறனுடன் வருகிறது. இது 15W வயர்லெஸ் சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது. மறுபுறம், இது 20W USB-C மற்றும் 18W USB-A சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது. இதை நீங்கள் வயர்லெஸ் சார்ஜராக நேரடியாகப் பயன்படுத்தலாம்.

வெளியில் செல்லும் நேரத்தில் சார்ஜர் டாக்கில் இருந்து சாதனத்தைப் பிரித்து பவர் பேங்க் ஆக பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் இதை நீங்கள் மொபைல் ஸ்டாண்ட் ஆக பயன்படுத்தலாம். இதில் பவர் சார்ஜர் மோட் மற்றும் பவர் பேங்க் மோட் என்று 2 மோட்கள் பயன்படுத்தக் கிடைக்கிறது. இது அணைத்து வகையான வயர்லெஸ் சார்ஜிங் போன்கலுடன் இணக்கமாகிறது.

வயர்லெஸ் ஆதரவை கொண்ட அனைத்து வகையான ஆண்ட்ராய்டு சாதனங்கள் மற்றும் அனைத்து ஐபோன் வகையான சாதனங்களுடனும், வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் இயர்பட்ஸ் சாதனங்களையும் இது சிறப்பாக சார்ஜ் செய்கிறது. வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஸ்மார்ட் வாட்ச் சாதனங்களை மட்டும் இது ஆதரிக்காது என்பது கவனிக்கத்தக்கது. இதன் அசல் விலை ரூ.3,999 ஆகும்.

இந்த வயர்லெஸ் பவர் பேங்க் சாதனத்தின் விலை என்ன?

ஆனால், இப்போது அமேசான் வழியாக 40% தள்ளுபடியுடன் இந்த Spigen 10000mAh 3 in 1 Wireless Charging Power Bank டிவைஸ் வெறும் ரூ. 2,399 விலையில் வாங்க கிடைக்கிறது. சிறப்பான ஆல்ரவுண்டர் போர்ட்டபிள் பவர் பேங்க் சாதனத்தை வாங்க ஐடியா உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த சாதனத்தைத் தேர்வு செய்யலாம். இது 12 மாத வாரண்டியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Spigen Lithium Polymer 10000mAh 3 in 1 Wireless Charging Power Bank
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X