தரமான ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!

|

பிரபலமான ஹாங் காங்கை சேர்ந்த நிறுவனமான சவுண்ட் ஒன் நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய ப்ளூடூத் சவுண்ட் ஒன் டிசி 111 இயர்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த இயர்போன் மாடல் நவீன வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ப்ளூடூத் இயர்போன் ஆனது கழற்றக்கூடிய இயர் பிளக்களும், இரண்டு கேபிள்களுடன் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இயர்போனின் மாடலின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

புதிய சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் ப்ளூடூத் மோடில் ஆடியோ அளவினை 60 முதல் 70 சதவிகிதத்தில் பயன்படுத்தும் போது 10 மணி நேர பிளே டைம், முழு அளவு ஆடியோ பயன்படுத்தும் போது 8 மணி நேர பிளே டைம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த இயர்போன் மாடல் ஆனது ப்ளூடுத் 5.0 தொழில்நுட்பம் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு இந்த இயர்போனின் ஒருபுறம் பேட்டரி மற்றொருபுறம் கண்ட்ரோல்களும் வழங்கப்பட்டுள்ளன. வையர்டு கேபிள் மோட் கொண்டு பேட்டரி தீர்ந்து போகும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இயர்போன்கள் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் பாதுகாப்பு வசதி கொண்டிருக்கின்றன.

இந்த இயர்போன் மாடல் பொறுத்தவரை தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் மாடல் அனைத்து இடங்களிலும் எடுத்த சென்று பயன்படுத்த மிகவும் அருமையாகவும் இருக்கும், வடிவமைப்பும் மிக அருமையாக இருக்கும்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சவுண்ட் ஒன் டிசி 111 மாடலின் உண்மை விலை ரூ.2,990-ஆக உள்ளது, எனினும் குறிப்பிட்ட காலத்திற்கு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் ரூ.1,690-விலையில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sound One DC-111 detachable Bluetooth earphones launched for Rs. 1690: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X