சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR சாதனத்தின் நன்மைகள் தெரியுமா?

நமது உடலில் உள்ள குறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு வரும் நவீன சாதனங்களில் ஒன்று சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR

|

நமது உடலில் உள்ள குறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு வரும் நவீன சாதனங்களின் உற்பத்தி பெருகி வரும் நிலையில் இந்த மார்க்கெட் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் முதல் மற்ற நிறுவனங்கள் வரை இந்த மார்க்கெட்டை குறி வைத்துள்ளதால் இதில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது நமக்கு தேவையான இதயத்தின் சென்சார் முதல் ரத்த அழுத்தத்தை கண்டுபிடிக்கும் மானிட்டர் வரை பல்வேறு சாதனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR சாதனத்தின் நன்மைகள் தெரியுமா?

அந்த வகையில் வெளியாகியுள்ள ஒரு சாதனம் தான் சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR என்பது. காதில் அணிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டாக்பேண்டை அணிவதால் பயனாளிகளுக்கு அதிக அளவு புதிய அனுபவங்களை தருகிறது. ஸ்மார்ட்வாட்சுகளை விட இரண்டு மடங்கும் பயந்தரும் வகையில் இந்த புளூடூத் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் சில மணி நேரம் இந்த சாதனத்தை அணிந்தாலே அதில் கிடைக்கும் நன்மைகளை புரிந்து கொள்ளலாம். சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR எப்படி பெரும்பாலான பயனாளிகளை ஈர்க்க போகிறது என்பதை பார்ப்போம்.

டிசைன்:

டிசைன்:

இந்த சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR ஒரு வெள்ளை நிற பாக்ஸில் வெளிவருகிறது. இந்த பாக்ஸில் சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR , சார்ஜ் செய்யும் சாதனம், மைக்ரோ யூஎஸ்பி சார்ஜ் செய்யும் கேபிள், இரண்டு காதுகளிலும் வைக்கும் பட்ஸ்கள் மற்றும் சில பொருட்கள் உள்ளன. மேலும் இந்த சாதனத்தில் பிங்கர் பிரிண்ட் வசதியும் உண்டு. இந்த சாதனத்தின் டிசைன் மிக அழகிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. புளூடூத் இயர்பீஸை விடுவிக்க இந்த சாதனத்தில் ஒரு பட்டன் உள்ளது. இதய சென்சார் செயல்படுவதை குறிக்கும் வகையில் இதில் ஒரு பச்சை நிற லைட் இருக்கின்றது

இதில் புளூடூத் இயர்பீஸ் இருந்தபோதிலும் அதிக நேரம் அணிந்து கொள்வதில் எந்தவித சிரமும் இருக்காது. சிலிக்கான் பிராண்டுகள் போல் அணிந்து கொள்வதில் எந்தவித சிரமமும் இல்லாத இந்த சாதனம் வெளி எளிதாக ஒரு வாட்ச் அணிந்து கொள்வது போல் அணிந்து கொள்ளலாம். இதில் 0.96 இன்ச் ஓ.எல்.இ.டி டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இந்த பேண்டின் எடை வெறும் 35 கிராம் மட்டுமே என்பதால் அணிந்திருப்பதே தெரியாது. ஆனால் இந்த சாதனத்தில் வாட்டர்புரூப் இல்லை என்பதால் கவனமாக இருக்க வேண்டும்

சிறப்பு அம்சங்கள்:

சிறப்பு அம்சங்கள்:

ஏற்கனவே கூறியபடி இந்த சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR சாதனம் புளூடூத்துடன் கூடிய ஒரு காதில் அணியும் சாதனம். இந்த சாதனம் மூலம் ரத்த அழுத்தம், இதயதுடிப்பு, போன் டிராக்கிங் மற்றும் ஸ்லீப் மானிட்டர் ஆகியவை உள்ளது. இந்த வசதிகள் மற்ற பிராண்டுகளில் உள்ள வசதிகள் என்றாலும் இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவெனில் ஸ்மார்ட்போன் மூலம் ரிமோட் கண்ட்ரோல் புகைப்படங்களை எடுக்க இந்த சாதனம் பயன்படுகிறது. மேலும் புளூடூத் மூலம் நமக்கு வரும் போன் அழைப்புகளையும் இதன் மூலம் பெறலாம். மேலும் இதயத்துடிப்பு சீராக இல்லாமல் இருந்தால் இந்த சாதனம் நமக்கு தகுந்த எச்சரிக்கையை கொடுக்கும்

செயல்படும் விதம்:

செயல்படும் விதம்:

இந்த சாதனத்தை செயல்படுத்துவதில் எந்தவித சிரமமும் இருக்காது. மூன்று முறை ஸ்க்ரீனை டேப் செய்வதன் மூலம் இந்த சாதனத்தை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம். அதேபோல் ஒரு வசதியில் இருந்து இன்னொரு வசதிக்கு செல்ல அதுவே வழிகாட்டும். ஹோம் ஸ்க்ரீனில் பேட்டரியின் தன்மையும் தேதி மற்றும் நேரத்தையும் காட்டும். அதற்கு அடுத்த ஸ்டெப்பில் இந்த சாதனம், பெடோமீட்டர், இதயத்துடிப்பு மானிட்டர், ரத்த அழுத்த மானிட்டர் ஆகியவை உள்பட அனைத்து வசதிகள் குறித்தும் காண்பிக்கும்.

இந்த சாதனத்தை வைத்து இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தங்களை தெரிந்து கொண்டு நமது உடலின் தன்மையை புரிந்து கொள்ளலாம். ரத்த அழுத்தத்தை தெரிந்து கொள்ளும் சாதனமாக இது இருந்தாலும் இதிலும் சில குறைகள் உள்ளன. இதில் Osram SFH7070 என்ற சென்சார் உள்ளது. இதுதான் இதயத்துடிப்பை மானிட்டர் செய்கிறது. இந்த ஆப்டிக்கல் சென்சார் ஒரு பிரைட்டான லைட்டை கொண்டு இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கணக்கிடுகிறது.

நார்மல் மோட்

நார்மல் மோட்

இந்த சாதனத்தின் செயலியை நமது ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து கொள்வதன் மூலம் எண்ணற்ற பயன்களை பெறலாம். இந்த சாதனம், நார்மல் மோட் மற்றும் ஹெட்செட் மோட் என இரண்டு விதமான மோட்களின் மூலம் செயல்படுவது மட்டுமின்றி இந்த சாதனத்தின் மூலம் இசையை ரசித்து கேட்கலாம், நமக்கு வரும் போன் கால்களையும் பெற்று பேசலாம்.

ஹெட்செட் மோட் நமக்கு மிக எளிதானது. இதில் உள்ள ஒரு சிறு குறையாக இதனை பயன்படுத்தும்போது நமது ஸ்மார்ட்போனில் உள்ள லொகேஷன் தானாகவே ஆன் ஆகிவிடும். மேலும் போன் டிராக்கிங், ரிமோட் கேமிரா வசதி ஆகியவை குறித்த நோட்டிபிகேசனும் கிடைக்கும்.

பேட்டரி

பேட்டரி

மார்க்கெட்டில் நாம் நடந்து சென்றால் இந்த சாதனம் நம்மை டிராக் செய்யும். நாம் நடந்து செல்லும்போதும் பயணம் செய்யும் இடம் குறித்தும் இந்த சாதனம் நம்மை டிராக் செய்யும். நாம் இந்த சாதனம் மூலம் நம்முடைய நடைப்பயணத்தின் ஷெட்யூலையும் தெரிந்து கொள்ளலாம்

மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சிரி போன்களில் உள்ள கூகுள் அசிஸ்டெண்ட் வாய்ஸ் சப்போர்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றே நொடிகளில் ஒரே ஒரு பட்டனை தட்டுவதன் மூலம் இந்த அசிஸ்டெண்ட்டை ஆக்டிவேட் செய்யலாம். அதேபோல் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலம் இசையையும் ரசிக்கலாம். அதேபோல் நமக்கு வரும் கால்களையும் அட்டெண்ட் செய்யலாம்


இதில் உள்ள 95mAh பேட்டரி சுமாஅர் 72 மணி நேரத்திற்கு சார்ஜ் நிற்கும் வகையில் உள்ளது. ஒருநாள் முழுவதும் இந்த சாதனத்தை உபயோகித்தாலும் பாதி சார்ஜ் நிற்கும்

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
 முடிவுரை:

முடிவுரை:

மொத்தத்தில் இந்த சோல்ஃபிட் சோனிக் V08 டாக்பேண்ட் HR சாதனம் மிகவும் பயனுள்ள ஒரு சாதனமாகவே கருதப்படுகிறாது. பயன்படுத்த எளிதாக, ஃபிட்னெஸ்ஸை தெரிந்து கொள்ள, நம்மை வழிப்படுத்த, இசை, கால்களை கேட்க என பலவழிகளில் இந்த சாதனம் பயன்படுகிறது. மேலும் இதன் விலை தற்போது ரூ.9999 என்று உள்ளது. ஆனாலும் இந்த விலைக்குரிய பயன்பாடுகள் இதில் இருப்பதால் விலை குறித்து கவலை கொள்ள தேவை இல்லை. வாட்டர் புரூப் இல்லை என்பதை தவிர இந்த சாதனத்தில் வேறு எந்த பெரிய குறையும் இல்லை.

Best Mobiles in India

English summary
Soulfit Sonic V08 TalkBand HR review: It’s more than a fitness band; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X