சுவர் முழுவதும் ஸ்க்ரீன் தான்: தியேட்டர் தரத்தில் வெளியான Sony Smart TV- விலை இதோ!

|

Sony XR-85X95K Ultra-HD Mini LED TV ஆனது டால்பி விஷன், டால்பி அட்மாஸ் ஆதரவுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. சோனி X95K டிவியானது 85 இன்ச் என்ற ஒற்றை வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

சோனியின் ஃப்ளாக்ஷிப் X95K டிவி

சோனியின் ஃப்ளாக்ஷிப் X95K டிவி

Sony XR-85X95K Ultra-HD Mini LED TV ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியின் விலை ஆனது மிக உயர்வாக இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்டிவியானது சோனியின் ஃப்ளாக்ஷிப் X95K டிவி வரம்பின் ஒரு பகுதியாக வெளியாகி இருக்கிறது. Sony XR-85X95K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட்டிவியானது பல்வேறு பிரத்யேக அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

பிரத்யேக XR செயலி

பிரத்யேக XR செயலி

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் சோனியின் முதல் மினி எல்இடி டிவி சீரிஸ் இதுவாகும். இந்த ஸ்மார்ட்டிவி சோனியின் பிரத்யேக XR செயலி மூலம் இயக்கப்படுகிறது.

மினி எல்இடி டிஸ்ப்ளே தொழில்நுட்பம் ஆனது துல்லியமான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. பேக்ரவுண்ட் காட்சிகளை மங்கலாக்கும் XR பேக்லைட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் இந்த டிவியில் இருக்கிறது.

Sony XR-85X95K Mini LED TV விலை

Sony XR-85X95K Mini LED TV விலை

Sony XR-85X95K Mini LED TV இந்தியாவில் ஒரே வேரியண்ட்டில் வெளியாகி இருக்கிறது. அது 85-inch XR-85X95K வேரியண்ட் ஆகும். முன்னதாகவே குறிப்பிட்டது போல் இந்த ஸ்மார்ட்டிவியின் விலையானது மிக அதிகம் ஆகும்.

அதாவது இந்த டிவியின் விலை ரூ.8,99,900 ஆகும். பெஸ்ட் பை சலுகையின் ஒரு பகுதியாக இந்த டிவியை ரூ.6,99,990 என வாங்கலாம்.

இந்த ஸ்மார்ட்டிவி சோனி சென்டர் ஸ்டோர், முக்கிய எலெக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் இ-காமர்ஸ் போர்ட்டல்களில் கிடைக்கிறது.

மினி எல்இடி டிஸ்ப்ளே தொழில்நுட்பம்

மினி எல்இடி டிஸ்ப்ளே தொழில்நுட்பம்

சோனியின் புதிய ஸ்மார்ட்டிவி சாம்சங் உள்ளிட்ட ப்ரீமியம் ஸ்மார்ட்டிவிகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மினி எல்இடி டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் வெளியாகியுள்ள சோனியின் முதல் டிவி இதுதான்.

XR பேக்லைட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம்

XR பேக்லைட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம்

Sony XR-85X95K மினி LED TV சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், சோனி X95K சீரிஸ் இல் ஒரே வேரியண்ட் தான் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் அல்ட்ரா-எச்டி தீர்மானத்துடன் 3840x2160 பிக்சல் தெளிவுத்திறனைக் கொண்டிருக்கிறது.

பிரத்யேக XR செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்டிவியில் XR பேக்லைட் மாஸ்டர் டிரைவ் தொழில்நுட்பம் இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்டிவி HDR10, Dolby Vision மற்றும் Dolby Atmos ஒலி ஆதரவு உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது.

அக்யூஸ்டிக் மல்டி ஆடியோ ஆதரவுடன் 6 ஸ்பீக்கர்கள்

அக்யூஸ்டிக் மல்டி ஆடியோ ஆதரவுடன் 6 ஸ்பீக்கர்கள்

இந்த ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயங்குகிறது. வாய்ஸ் கட்டுப்பாடுகளுக்கான கூகுள் அசிஸ்டெண்ட் ஆதரவு, க்ரோம் காஸ்ட் உள்ளமைவு, ஆப்பிள் ஏர்ப்ளே மற்றும் ஆப்பிள் ஹோம்கிட் ஆதரவு இருக்கிறது.

4K ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்டிவியில் 120Hz ரெஃப்ரெஷிங் ரேட் டிஸ்ப்ளே, 60W ஒலி வெளியீட்டுத் தன்மை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியில் அக்யூஸ்டிக் மல்டி ஆடியோ அமைப்பு உடன் கூடிய 6 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முன்னதாக அறிமுகமான ஸ்மார்ட்டிவி

முன்னதாக அறிமுகமான ஸ்மார்ட்டிவி

முன்னதாக இந்தியாவில் புதிய பிராவ்யா எக்ஸ்ஆர் மாஸ்டர் சீரிஸ் ஏ95கே ஓஎல்இடி ஸ்மார்ட்டிவியை சோனி அறிமுகம் செய்தது. இந்த புதிய டிவியானது ஒற்றை 65 இன்ச் வேரியண்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்டிவியில் பிரத்யேகமாக Cognitive Processor பொருத்தப்பட்டுள்ளது. இது ஒளி மற்றும் ஒலி தன்மைக்கு ஏற்ப செயல்படும்.

பல்வேறு பிரத்யேக அம்சங்கள்

பல்வேறு பிரத்யேக அம்சங்கள்

இந்த ஏ95கே சோனி டிவியானது எச்டிஎம்ஐ 2.1 போர்ட் உடன் வெளியாகி இருக்கிறது. 4கே ஆதரவுடன் கூடிய இந்த டிஸ்ப்ளே ஆட்டோ லோ லேட்டன்சி மோட், ஆட்டோ எச்டிஆர் டோன், ஆட்டோ கேம் மோட் போன்ற ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

அதேபோல் IMAX என்ஹான்ஸ்ட், நெட்ஃபிளிக்ஸ் கேலப்ரேடட் மோட், டால்பி விஷன், டால்பி அட்மாஸ் ஆதரவுகளுடன் 3டி சரவுண்ட் அப்ஸ்கேலிங்கை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ரூ.3,69,990 என்ற விலையில் வெளியானது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Sony XR-85X95K Ultra-HD Mini LED TV Launched in India, New Smart tv Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X