இந்தியா: வியக்கவைக்கும் விலையில் சோனி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்.!
சோனி நிறுவனம் அன்மையில் ஸ்மார்ட்போன்களை விட ஹெட்போன் சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஹெட்போன் மாடல்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

நாய்ஸ் கேன்சலிங்
அதன்படி சோனிநிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.குறிப்பாக புதிய சோனி ஹெட்போன் WI-1000XM2 என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறது.
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய சோனி ஹெட்போனில் அதிநவீன நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம்இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குவேண்டி புதிய ஹெட்போனில்
சோனி நிறுவனம் பிரத்யேக எச்டி நாய்ஸ் சேன்சலிங் பிராசஸர் QN1 வழங்கியுள்ளது.

அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல்
இந்த சாதனத்தில் உள்ள அடாப்டிவ் சவுண்ட் கண்ட்ரோல் அம்சம், வெளிப்புற சூழல் மற்றும் பயனரின் நடவடிக்கைக்கு ஏற்ப ஹெட்போன்களின் சத்தத்தை தானாக மாற்றியமைக்கும். ஆங்கில்டு இயர்போன் வடிவமைப்பு வெளிப்புற சத்தம் காதில் நுழைவதை தடுக்கிறது. மேலும் இந்த ஹெட்போனில் மெல்லிய சிலிகான் நெக்பேண்ட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் அசிஸ்டன்ட்
அதேசமயம் சோனி WI-1000XM2 ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட், அலெக்சாபோன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. பின்பு ஹை-ரெஸ் வசதியும் இவற்றுள் அடக்கம்.

10மணி நேரத்திற்கு பிளேபேக்
குறிப்பாக இந்த சாதனத்தில் உள்ள பேட்டரி 10மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. பின்பு இதனை பத்துநமிடங்கள் சார்ஜ் செய்தால் 80மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்திற்கு சார்ஜ் செய்ய யு.எஸ்.பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டியும் வழங்கப்பட்டுள்ளது.

3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக்
இந்த சாதனத்திற்கு கழற்றக்கூடிய 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் பயன்படுத்த முடியும். பின்பு இதன் விலை ரூ.21,990-என்றும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








