அதிகநேரம் பாடி அதிரவிடும் சோனியில் வயர்லெஸ் ஹெட்போன்கள்.!
அதிக நேரம் பாடும் வகையில் சோனி நிறுவனம் புதிய வயர்லெஸ் ஹெட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏஐ தொழில் நுட்பமும் இடம் பெற்றுள்ளது.
அதிக நேரம் பாடும் வகையில் சோனி நிறுவனம் புதிய வயர்லெஸ் ஹெட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதில் ஏஐ தொழில் நுட்பமும் இடம் பெற்றுள்ளது. இதில் கேன்சலேஷன் என்னும் தொழில் நுட்பமும் இடம் பெற்றுள்ளதால் நீண்ட நேரம் பாடலை கேட்க முடியும்.
மேலும், அதிர வைக்கும் தொழில் நுட்பத்தில் வந்துள்ளது. இதில் பாடல்களை கேட்போர்களை கட்டாயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

சோனி நிறுவனத்தின் ஹெட்போன்:
புதிய ஹெட்போன்களில் சோனி நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சார்ந்த இயங்கும் சத்த்தை தடுத்து ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. இந்த தொழில் நுட்பம் வெளிப்புற சூழலுக்கு ஏற்ப சத்தத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும்.

வாய்ஸ் கமெண்ட்கள்:
இத்துடன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை எளிமையாக செயல்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஹெட்போனில் பிரத்யேக என்.சி. (NC) பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போனில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹெட்போன்களை தொடாமலேயே வாய்ஸ் கமாண்ட்களை செயல்படுத்திக் கொள்ள ஹெட்போனில் பில்ட்-இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் அசிஸ்டண்ட் வசதி :
சோனி WH-CH700N ஹெட்போன்களின் மற்றொரு புதிய அம்சமாக டிஜிட்டல் சவுன்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது கம்ப்ரெஸ் செய்யப்பட்ட மியூசிக் ஃபைல்களின் தரத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஹெட்போன்களில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி மென்பொருள் அப்டேட் மூலம் வழங்கப்படும் என சோனி தெரிவித்துள்ளது.

7 மணி நேரம் உபயோகிக்கலாம்:
இந்த ஹெட்போன்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு மணி நேரம் ஆகும் என சோனி தெரிவித்துள்ளது. இத்துடன் மியூசிக் செட்டிங்கிற்கு ஏற்ப அதிகபட்சம் 35 மணி நேரத்திற்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனுடன் க்விக் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போன்களை ஒரு மணி நேரத்திற்கு பயன்படுத்த வெறும் பத்து நிமிடங்கள் மட்டும் சார்ஜ் செய்தாலே போதுமானது.

ரூ.12,990:
நாடு முழுக்க இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் சோனியின் புதிய WH-CH700N ஹெட்போன்களை வாங்க முடியும். இந்தியாவில் இதன் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications