சோனி பிரீமியம் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!
சோனி நிறுவனம் தனது புதிய WF-H800 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்பம் கொண்டு இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இயர்பட்ஸ் சோனியின் டிரை-ஹோல்டு ஸ்டிரக்சர், சோனி டிஜிட்டல் சவுண்ட் என்ஹானஸ்மென்ட் என்ஜின், நீண்ட பேட்டரி லைஃப் ஆட்டோமேடிக் பிளேஃபாஸ் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்ஜிங் பாக்ஸ் வசதியுடன் வெளிவந்துள்ள இந்த புதிய WF-H800 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாலை ஒரு முறை சார்ஜ் செய்தால் 16மணிநேரம் பயன்படுத்தலாம். அதாவது 10நிமிடம் சார்ஜ் செய்தாலே 70நிமிடங்கள் தாராளமாக பயன்படுத்த முடியும். மேலும் இந்த சாதனம் 8மணிநேரம் வரைக்கும் பயன்படுத்தக்கூடிய பேட்டரி வசதியை கொண்டுள்ளது.

சோனியின் இந்த புதிய இயர்பட்ஸ் 6எம்எம் டோம்-டைப் டிரைவர்களை கொண்டு இயங்குகிறது. இத்துடன் ப்ளூடூத் 5 மற்றும் புதிய ப்ளூடூத் சிப் கொண்டுள்ளது. பின்பு இவை சீரான ஆடியோ அனுபவத்தை குறைந்த லேடென்சியில் வழங்குகிறது.

இந்த இயர்பட்ஸ் மாடல் ஆனது பயன்பாட்டில் இருந்தால் மட்டுமே ஆன் ஆகும். அதாவது காதில் மாட்டியிருந்தால் தானாக ஆன் ஆகும். தாமதமின்றி ப்ளூடூத் பரிமாற்றமும் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய WF-H800 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலின் எடை 7.6கிராம் மட்டுமே. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் என எதில் பயன்படுத்தினாலும் கூகுள் அசிஸ்டெண்ட், அலெக்ஸா, சிரி என அனைத்துக்கும் சப்போர்ட் செய்யும். பின்பு இது பிளே ஸ்டோரில் சோனி இயர்பட்ஸ் இணைப்பு செயலியை தரவிறக்கம் செயது இயர்பட்ஸ் உடன் இணைத்துக்கொள்ளலாம்.

இந்த புதிய சோனி சாதனம் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது, பின்பு இதன் விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications