தெறிக்கவிடும் சோனி இயர்பட்ஸ்! டிசைன் வேற லெவல்! அம்சங்கள் அதுக்கும் மேல! என்ன விலை?
ஆப்பிள், சாம்சங் தயாரிப்புகளுக்கு இருப்பதை போலவே சோனி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும், இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த சோனி நிறுவனம், இப்போது கொஞ்சம் துவண்டுபோய்விட்டது. அதுவும், இந்தியாவில் மட்டும்தான் மற்ற நாடுகளில் பின்னிப்பெடல் எடுத்து வருகிறது.
இப்போது, அதிநவீன அம்சங்களுடனும், புதுவிதமான டிசைன்களிலும் இயர்பட்ஸ்களை களமிறக்கி வருகிறது. அந்த வரிசையில், சோனி டபுள்யூஎஃப் சி700என் (Sony WF-C700N) இயர்பட்ஸ் அம்சங்களிலும் அசத்துகிறது. பார்த்தாலே வாங்க வைக்கும் அளவுக்கு புதுவிதமான டிசைனிலும் இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் எப்போது விற்பனை வருகிறது? விலை என்ன? அம்சங்கள் எப்படி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

சோனி டபுள்யூஎஃப் சி700என் இயர்பட்ஸ் அம்சங்கள் (Sony WF-C700N Specifications): இந்த இயர்பட்ஸ் 5மிமீ டிரைவர்கள் கொண்டுள்ளது. வால்யூம் கன்ட்ரோலுக்காக டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மெண்ட் இன்ஜின் (Digital Sound Enhancement Engine) என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் 15 மணி நேர பேட்டரி பேக்கப் கொடுக்கும்.
டைப் - சி போர்ட் உடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 1 மணி நேரம் இயர்பட்ஸ் பயன்படுத்தலாம். இந்த சோனி இயர்பட்ஸ் சார்ஜிங் கேஸை ஃபுல் சார்ஜ் செய்ய 3 மணி நேரம் பிடிக்கும். அதேபோல இயர்பட்ஸ் சார்ஜ் செய்ய 1.5 மணி நேரம் பிடிக்கும். மல்டிபாயின்ட் சப்போர்ட் உள்ளதால், ஒரே நேரத்தில் கேஸ் மற்றும இயர்பட்ஸ் இரண்டையும் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
இந்த இயர்பட்ஸில் நாய்ஸ் கேன்சலிங்காக பிரத்யேக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நாய்ஸ் கேன்சலிங் ஆப்சனை ஆன் செய்தால், கூடுதலாக பேட்டரி பவர் குறையும். வி5.2 (V5.2) ப்ளூடூத் கனெக்டிவிட்டி சப்போர்ட் உள்ளது. அதோடு எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோபோல, ஒன்றுக்கும் மேற்பட்ட சவுண்ட் மோட்ஸ் வருகிறது.
ஐபிஎக்ஸ்4 (IPX4) தர ஸ்பிளாஸ் (Splash) மற்றும் ஸ்வெட் (Sweat) ப்ரூப் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சோனி ஹெட்போன்ஸ் கனெக்ட் ஆப் கனெக்டிவிட்டி இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் தலா 4.5 கிராம் எடைக் கொண்டுள்ளது. சார்ஜிங் கேஸ் மட்டும் 31 கிராம் எடைக் கொண்டுள்ளது.
இந்த இயர்பட்ஸ் வரும் ஜூலை 15ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. பிளாக் (Black), வைட் (White), லாவெண்டர் (Lavender), சேஜ் கிரீன் (Sage Green) ஆகிய மூன்று கலர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலையை பொறுத்தவரையில் ரூ.8,990ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசானில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








