சோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
சோனி நிறுவனம் தொடர்ந்து அருமையான சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, அதன்படி இன்று WF-1000XM3 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது சோனி நிறுவனம். மேலும் புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

இந்த புதிய சோனி இயர்பட்ஸ் நாய்ஸ் கேன்சலேசன் அம்சம் பயன்படுத்தாத போது 32மணி நேர பேக்கப் வழங்கும். இத்துடன் சோனி WF-1000XM3 மாடலில் அமேசான் அலெக்சா ஆப்பிள் சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
WF-1000XM3 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் ஆனது ஹெச்டி நாய்ஸ் கேன்சலிங் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் குளோஸ்டு, டைனமிக் டைப் வசதிகள் இவற்றள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

மேலும் 6 எம்எம், டோம் டைப், ப்ளூடூத் 5.0, ஈத்தர்நெட் கன்டென்சர் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 32மணி நேர பிளேடைம், பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.
இந்த சாதனத்தின் மிகவும் எதிர்பார்த்த நாய்ஸ் சென்சார் தொழில்நுட்பம் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் இருப்பதால் சிறந்த ஆடியோ வசதியை வழங்குகிறது. மேலும் யுஎஸ்பி டைப் சி போர்ட்,கூகுள் அசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.

சோனி நிறுவனத்தின் WF-1000XM3 மாடல் பிளாக் மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. பின்பு இந்த சாதனத்தின் விலை ரூ.19990 -ஆக உள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இதன் விற்பனை துவங்கிய முதல் பத்து நாட்களுக்கு ரூ.17990-என்ற சிறப்பு விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் புதிய சோனி WF-1000XM3 விற்பனை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications