Home
Gadgets

Sony பிளேஸ்டேஷன் 'PS 5' இப்படித்தான் இருக்கும் மிரட்டலான விடியோவை வெளியிட்ட நிறுவனம்!

சோனி நிறுவனம் பல வருடத் தாமதத்திற்குப் பிறகு இறுதியாக பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோல் சாதனத்தை ஒருவழியாக அறிமுகம் செய்துள்ளது. பல மாத எதிர்பார்ப்பிற்குப் பின்னர், சோனி நிறுவனம் தற்பொழுது அதன் இறுதி வடிவமைப்பு டிசைனை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சோனி அறிமுகம் செய்துள்ள புதிய பிளேஸ்டேஷன் PS 5 பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.

புதிய பிளேஸ்டேஷன் 5

புதிய பிளேஸ்டேஷன் 5

சோனி நிறுவனத்தின் இந்த புதிய பிளேஸ்டேஷன் 5 சாதனத்தின் இறுதி வடிவமைப்பைப் பார்த்தால், சோனி அதன் அடுத்த தலைமுறைக்குத் தனது கன்சோலை எடுத்து சென்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. புதிய பிளேஸ்டேஷன் PS 5 கன்சோல் இரண்டு வெவ்வேறு வகைகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளேஸ்டேஷன் PS 5 இன் முதல் வேரியண்ட் 4K ப்ளூ-ரே டிரைவ் அம்சத்துடன் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளேஸ்டேஷன் PS 5 ஆல்-டிஜிட்டல் மாடல்

பிளேஸ்டேஷன் PS 5 ஆல்-டிஜிட்டல் மாடல்

அதேபோல், பிளேஸ்டேஷன் PS 5 இந்த இரண்டாவது வேரியண்ட் முற்றிலுமாக ஆல்-டிஜிட்டல் மாடலாக வெளிவரும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டாவது மாடல் வேரியண்ட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் (Xbox One S) சாதனத்துடன் ஒற்றிப்போகிறது. PS 5 இன் ஒட்டுமொத்த வடிவமைப்பைப் பொறுத்தவரை, பிளேஸ்டேஷன் 5 செங்குத்தாக நிற்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

'ஃபின்' டிசைன்

'ஃபின்' டிசைன்

எனவே இது மைக்ரோசாப்டின் பிஎஸ் 5-போட்டியாளரான எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸுடன் ஒத்ததாக இருக்கிறது. PS 5, ஒரு கருப்பு உள் சேஸைக் கொண்டுள்ளது, வெளிப்புற டிசைன் 'ஃபின்' போன்ற வடிவமைப்புடன் மிரட்டலான தோற்றத்தில் ப்ளூ நிற லைட் உடன், ஆப்டிகல் டிரைவிற்கு இடமளிக்க கன்சோல் ஸ்டாண்டின் அடிவாரத்தை நோக்கி பெரிய பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் சோனியின் கடந்த பிளேஸ்டேஷன் வடிவமைப்பு டிசைன்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டுள்ளது.

இந்த டிசைன் சிலருக்கு சிக்கலாக இருக்குமோ?

புதிய கன்சோலின் ஃபின் வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தை வைத்துப் பார்க்கையில் PS 5 செங்குத்தாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தெரிகிறது. இந்த டிசைன் பல பயனர்களுக்குப் பொருந்தக்கூடிய வழியைக் கட்டுப்படுத்தும் என்று கருதப்படுகிறது. பிளேஸ்டேஷன் 4 சாதனம் கிடைமட்ட பொருத்தத்திற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சோனியின் இந்த செங்குத்தான மாற்றம் சில பயனர்களை எரிச்சலூட்டியுள்ளது என்றே கூறவேண்டும்.

சோனி டூயல்சென்ஸ் கண்ட்ரோலர்

சோனி டூயல்சென்ஸ் கண்ட்ரோலர்

சோனி பிளேஸ்டேஷன் 5 சாதனத்துடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் காட்டப்பட்ட கன்சோலின் புதிய தலைமுறை டூயல்சென்ஸ் கண்ட்ரோலரின் தோற்றமும் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கன்சோலின் முன்பக்கத்தில், ஒரு யூ.எஸ்.பி-சி மற்றும் யூ.எஸ்.பி-ஏ போர்ட் உள்ளது, இது சார்ஜ் மற்றும் பிற நோக்கங்களுக்காக உதவும். சோனி இந்த புதிய வடிவமைப்பு கன்சோலுடன் ஏராளமான பிற சாதனங்களையும் சோனி வெளியிட்டுள்ளது.

சோனியின் பிற கேமிங் சாதனங்கள்

சோனியின் பிற கேமிங் சாதனங்கள்

சோனி பிளேஸ்டேஷன் PS 5 சாதனத்துடன், புதிய சோனி பல்ஸ் 3D வயர்லெஸ் ஹெட்செட், கன்சோலுக்கான மீடியா ரிமோட், டூயல்சென்ஸ் சார்ஜிங் டாக் மற்றும் வெப்கேம் ஆகியவை PS 5 கன்சோல் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிளேஸ்டேஷன் 5 சாதனத்தின் விலையைச் சோனி இன்னும் அறிவிக்கவில்லை, இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதாவது, அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் விற்பனைக்கு வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Sony Unveiled The First Look Of PlayStation 5 And DualSense Controller : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X