கனவுல கூட கிடைக்காது.. ரூ.9999 பட்ஜெட்ல SONY ஹோம் தியேட்டர்.. 4 ஸ்பீக்கர்ஸ்.. 1 சப்வூப்பர்.. 100W ஆடியோ அவுட்!
ரொம்ப கம்மி விலையில ஹோம் தியேட்டர் வாங்கனும், ஆனால், நல்ல கம்பெனியாவும் இருக்கனும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு சோனி நிறுவனத்தின் ஹோம் தியேட்டர் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் 4 ஸ்பீக்கர்கள் மற்றும் சப்வூப்பர் வந்தால் சொல்லவா வேண்டும்? அப்படியான பட்ஜெட்டில் சோனி எஸ்ஏ டி40எம்2 ஹோம் தியேட்டர் (Sony SA D40M2 Home Theatre) இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. 100W ஆடியோ அவுட் கொண்ட இந்த சோனி ஹோம் தியேட்டரின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
ஆடியோ குவாலிட்டி பக்காவாக எதிர்பார்த்தால், ரூ.25000 பட்ஜெட்டுக்கும் மேல் கிடைக்கும் ஹோம் தியேட்டர்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். ஆனால், இப்போது வெறும் ரூ.10000 பட்ஜெட்டிலேயே பக்கா ஹோம் தியேட்டர்கள் வருகின்றன. ஆனால், நீண்ட காலம் உழைக்குமா என்பது சந்தேமான விஷயம்தான். ஆனால், சோனி நிறுவனம் அப்படி கிடையாது.

ஏனென்றால், ஹோம் தியேட்டர் மட்டுமல்லாமல், டிவி உள்ளிட்ட ஆடியோ தொடர்பான டிவைஸ்களில் சோனி நிறுவனம் மிரளவிடும் குவாலிட்டியை கொண்டிருக்கும். இதற்கு ஏற்ப விலையும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், சோனி பிரியர்களே மூக்கில் விரல் வைக்கும் பட்ஜெட்டில் இந்த சோனி எஸ்ஏ டி40எம்2 ஹோம் தியேட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது.
சோனி எஸ்ஏ டி40எம்2 ஹோம் தியேட்டர் அம்சங்கள் (Sony SA D40M2 Home Theatre Specifications): மேட் பினிஷிங் (Matte Finish) டிசைனில் பிளாக் (Black) கலர் கொண்டிருக்கிறது. மொத்தமாக 4 சாட்டிலைட் ஸ்பீக்கர்கள் (Satellite Speakers) வருகின்றன. அதோடு 1 சப்வூப்பர் (Subwoofer) வருகிறது. இவற்றில் 100W ஆடியோ அவுட் (Audio Out) கொடுக்கப்படுகிறது.
இந்த ஆடியோ அவுட்டில் 4.1 சேனல் செட்டப் (4.1 Channel Setup) வருகிறது. ஆகவே, கம்மி பட்ஜெட்டிலும் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) அனுபவத்தை பெற்று கொள்ளலாம். டிவியில் கனெக்ட் செய்யும்போது குவாலிட்டியாக அவுட்புட் இருக்கும். அதேபோ பேஸ் பிரியர்களுக்கு ஏற்ப சப்வூப்பர் வருவதால், நல்ல அவுட்புட் எதிர்பார்க்கலாம். சிறிய வீடு மட்டுமல்லாம், அதிக சதுரடி கொண்ட வீடுகளிலும் இந்த மாடலின் ஆடியோ அவுட்புட் அதிகமாக கிடைக்கும்.
இந்த மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி (Bluetooth Connectivity) மற்றும் ஸ்டீரியோ மினி ஜாக் (Stereo Mini Jack) கனெக்டிவிட்டி வருகிறது. ஆகவே, ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட ப்ளூடூத் எனபில்ட் டிவைஸ்கள் மூலம் இந்த சோனி எஸ்ஏ டி40எம்2 ஹோம் தியேட்டர் மாடலை கனெக்ட் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.
இந்த வயர்லெஸ் கனெக்டிவிட்டிக்கு 10 மீட்டர்கள் வரையில் ரேஞ்ச் கிடைக்கும். போர்ட் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 1 யுஎஸ்பி போர்ட் (USB Ports) வருகிறது. ஏயுஎக்ஸ் (AUX) ஜாக் வருகிறது. இந்த சோனி எஸ்ஏ டி40எம்2 ஹோம் தியேட்டர் மாடலுக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. ரிமோட் கன்ட்ரோல் (Remote Control) சப்போர்ட் வருகிறது.
பிளாக் கலரில் மட்டுமே ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த சோனி எஸ்ஏ டி40எம்2 ஹோம் தியேட்டர் மாடலின் விலை ரூ.9999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அதோடு விற்பனையும் தொடங்கி இருக்கிறது. சோனி சென்டர்கள் (Sony Centers) மற்றும் ஆத்தரைஸ்டு டீலர்கள் (Authorized Dealers) ஸ்டோர்களில் கிடைக்கிறது.
மேலும், மேஜர் எலக்ட்ரானிக் ஸ்டோர்களிலும் (Electronic Stores) விற்பனைக்கு கிடைக்கிறது. ஈ-காமர்ஸ் தளங்களை பொறுத்தவரையில் அமேசான் (Amazon) மற்றும் ஃபிளிப்கார்ட் (Fipkart) தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.10000 பட்ஜெட்டுக்குள் பக்கா பிராண்ட் நிறுவனத்தின் ஹோம் தியேட்டர் வேண்டுமானால், இந்த சோனி எஸ்ஏ டி40எம்2 ஹோம் தியேட்டர் மாடலுக்கு செல்லலாம்.


Click it and Unblock the Notifications