கோ-ப்ரோ கேமராவிற்கு போட்டியாகச் சிறிய வகை சோனி RX0 II கேமரா அறிமுகம்.!
சோனி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதன் ரக்குடு சோனி ஆர்.ஏக்ஸ்0 (rugged RX0) ஆக்ஷன் கேமரா மாடலை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து RX0 II என்ற புதிய கேமரா மாடலை தற்பொழுது அறிமுகம் செய்துள
சோனி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதன் ரக்குடு சோனி ஆர்.ஏக்ஸ்0 (rugged RX0) ஆக்ஷன் கேமரா மாடலை அறிமுகம் செய்தது.
அதனைத் தொடர்ந்து RX0 II என்ற புதிய கேமரா மாடலை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

கோ ப்ரோ கேமராகளுக்கு போட்டியாக சோனி RX0 II
கோ ப்ரோ கேமராகளுக்கு போட்டியாக இந்த சிறிய ஆக்ஷன் கேமரா தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய சோனி RX0 II கேமரா பாக்கெட்டில் வைத்து பயனர்கள் எளிதாய் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை வெறும் 132 கிராம் மட்டுமே.

ஃபிளிப் அப் எல்.சி.டி டிஸ்பிளே
புதிய சோனி RX0 II கேமரா, ஃபிளிப் அப் எல்.சி.டி டிஸ்பிளே ஸ்கிரீன் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேமரா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆக்ஷன் கேமராகள் எதிலும் ஃபிளிப் ஸ்கிரீன் டிஸ்பிளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக சோனி நிறுவனம் தான் ஃபிளிப் ஸ்கிரீன் டிஸ்பிளே அறிமுகம் செய்துள்ளது.

4K வீடியோ ரெக்கார்டிங்
புதிய சோனி RX0 II கேமரா, வினாடிக்கு 30 பிரேம்ஸ் இல் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்கிறது. அதுமட்டுமின்றி வினாடிக்கு 1000 பிரேம்ஸ் என்ற எண்ணிக்கையில் சிறப்பான மிக துல்லியமான ஸ்லொவ் மோஷன் வீடியோ ரெக்கார்டிங் சேவையையும் வழங்குகிறது.

எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிள்ளைசேஷன்
விலாக்கிங் (vlogging) செய்பவர்களுக்கும், செல்ஃபி பிரியர்களுக்கும் இந்த புதிய சோனி RX0 II கேமரா ஒரு மிரட்டலான அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சோனி RX0 II கேமராவில் இன் பாடி எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிள்ளைசேஷன் சென்சார்கள், சாஃப்ட் ஸ்கின் எபெக்ட் மற்றும் ஆட்டோ ஃபோக்கஸ் எனப் பல சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.

விலை விபரம்
இந்த புதிய சோனி RX0 II கேமரா, டஸ்ட் ஃப்ரூப், கிரஷ் ஃப்ரூப் மற்றும் வாட்டர் ஃப்ரூப் சான்றிதழுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கேமராவை 33 அடி ஆழம் வரை நீருக்குள் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த சோனி RX0 II கேமரா இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.48,270 என்ற விலையில் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications