Home
Gadgets

PlayStation இருக்கா? SONY இறக்கிய சும்மா கிழி இயர்பட்ஸ்.. AI நாய்ஸ் கன்ட்ரோல்.. மல்டி-டிவைஸ் கனெக்டிவிட்டி!

இந்தியாவில் சோனி பிளேஸ்டேஷன் வைத்திருக்கும் கஸ்டமர்கள் அறக்க பறக்கும்படியான பட்ஜெட் மற்றும் பீச்சர்களுடன் சோனி பிளேஸ்டேஷன் பல்ஸ் எஸ்ப்ளோர் இயர்பட்ஸ் (Sony PlayStation PULSE Explore Earbuds) மற்றும் சோனி பிளேஸ்டேஷன் பல்ஸ் எலைட் வயர்லெஸ் ஹெட்செட் (Sony PlayStation PULSE Elite Wireless Headset) களமிறக்கி இருக்கிறது. பிளேஸ்டேஷன் லிங்க் டெக்னாலஜி, மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டி, இன்டிகிரேடெட் மைக்ரோபோன்கள், இன்டியூடிவ் கன்ட்ரோல் போன்ற பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த பிளேஸ்டேஷன் மாடல்களின் விவரங்கள் இதோ.

பிளேஸ்டேஷன் மட்டுமல்ல, அதற்காக கிடைக்கும் டிவைஸ்களும் பட்டையை கிளப்பும்படி இருக்கும். கேமிங் பிரியர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதால், வழக்கமாக கிடைக்கும் டிவைஸ்களைவிட அட்வான்ஸ் பீச்சர்களுடன் வெளியாகும். இப்படித்தான் பிளேஸ்டேஷன் பல்ஸ் இயர்பட்ஸ் மற்றும் ஹெட்செட் மாடல்கள் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கின்றன.

PlayStation இருக்கா? SONY இறக்கிய சும்மா கிழி இயர்பட்ஸ்.. AI நாய்ஸ்!

சோனி பிளேஸ்டேஷன் பல்ஸ் எஸ்ப்ளோர் அம்சங்கள் (Sony PlayStation PULSE Explore Specifications): இந்த பல்ஸ் இயர்பட்ஸ் பிரீமியம் டிசைனில் பிளேஸ்டேஷன் போலவே டூயல்-டேன் கலரில் வெளியாகி இருக்கிறது. சார்ஜிங் கேஸ் போர்டபிள் டிசைன் கொண்டிருக்கிறது. அல்ட்ரா பிரீமியம் ஆடியோ அவுட் கொடுக்கும்படி பிளானர் மேக்னடிக் டிரைவர்கள் (Planar Magnetic Drivers) வருகின்றன.

ஃபாஸ்ட் கனெக்டிவிட்டி கொடுக்க பிளேஸ்டேஷன் லிங்க் டெக்னாலஜி (PlayStation Link Technology) பிரத்யேகமாக வருகிறது. இதன் மூலம் நொடியில் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும். நாய்ஸ் கேன்சலேஷனுக்காக ஏஐ-என்ஹான்ஸ்டு நாய்ஸ் ரிஜக்சன் (AI-enhanced Noise Rejection) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டி (Multi Device Connectivity) வருகிறது.

இந்த சோனி பிளேஸ்டேஷன் பல்ஸ் எஸ்ப்ளோர் மாடலில் இன்டகிரேடட் மைக்ரோபோன்கள் (Integrated Microphones) வருகின்றன. இன்டியூடிவ் கன்ட்ரோல் (Intuitive Controls) கிடைக்கிறது. பில்ட்-இன் பேட்டரி வருகிறது. 5 மணி நேரங்களுக்கு இயர்பட்களிலும், 10 மணி நேரங்களுக்கு சார்ஜிங் கேஸ் மூலமும் பேக்கப் பெற்று கொள்ளலாம். ஒயிட் கலரில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது.

பிளேஸ்டேஷன் போர்டல் ரிமோட் பிளோயர் சப்போர்ட் உள்ளது. காம்பாக்ட் டிசைனில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற இயர்பட்ஸ் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். ஒருவேளை வயர்லெஸ் ஹெட்செட் மாடலில் ஆடியோ அனுபவம் வேண்டுமானால், சோனி பிளேஸ்டேஷன் பல்ஸ் எலைட் ஹெட்செட்டுக்கு செல்லுங்கள்.

PlayStation இருக்கா? SONY இறக்கிய சும்மா கிழி இயர்பட்ஸ்.. AI நாய்ஸ்!

சோனி பிளேஸ்டேஷன் பல்ஸ் எலைட் வயர்லெஸ் ஹெட்செட் அம்சங்கள் (Sony PlayStation PULSE Elite Wireless Headset Specifications): ப்ளஷ் இயர்கப்ஸ் (Plush Ear Cups) டிசைனில் வெளியாகி இருக்கிறது. முந்தைய மாடலை போலவே பிளானர் மேக்னடிக் டிரைவர்களை கொண்டுள்ளது. அதேபோல பிளேஸ்டேஷன் லிங்க் டெக்னாலஜி வருகிறது. ஏஐ என்ஹான்ஸ்டு நாய்ஸ் ரிஜக்சன் கிடைக்கிறது.

மல்டி டிவைஸ் கனெக்டிவிட்டி மற்றும் ரீடிராக்டபிள் மைக்ரோபோன் (Retractable Microphone) வருகிறது. இன்டியூடிவ் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். இந்த சோனி பிளேஸ்டேஷன் பல்ஸ் எலைட் வயர்லெஸ் ஹெட்செட் மாடலில் பேட்டரி பேக்கப் பட்டையை கிளப்புகிறது. 30 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 2 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

இந்த மாடலுக்கு சார்ஜர் ஹேங்கர் கிடைக்கிறது. இப்போது, விலை விவரங்களை பார்ப்போம். சோனி பிளேஸ்டேஷன் பல்ஸ் எஸ்ப்ளோர் மாடலின் விலை ரூ. 18,990ஆக இருக்கிறது. அதேபோல சோனி பிளேஸ்டேஷன் பல்ஸ் எலைட் மாடலின் விலை ரூ.12,990ஆக இருக்கிறது. அக்டோபர் 11ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. சோனி சென்டர் (Sony Center), அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony PlayStation PULSE Explore Wireless Earbuds With PlayStation Link Launched Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X