கனவு பலிக்குதே.. ரூ.5,000 விலை குறைப்பு.. PlayStation 5 ஸ்லிம்.. இந்த தேதிய விட்ராதீங்க.. செப்.22 தொடங்குது!
சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் (PlayStation 5 Slim) கேமிங் கன்சோலை வாங்குவது, லட்சக்கணக்கான கேமிங் பிரியர்களுக்கு கனவாகவே இருக்கிறது. இந்த கனவு பலிக்கும் நேரம் வந்துவிட்டது. செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து, தள்ளுபடி விலையில் பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் கன்சோலை ஆர்டர் செய்து கொள்ளலாம். டிஜிட்டல் எடிஷனுக்கும் இந்த தள்ளுபடி கிடைக்கிறது. இந்த மாடல்களின் விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரையில் சோனி பெஸ்டிவல் சேல் (Sony Festive Sale) நடக்கிறது. இதில் பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதில் பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் மட்டுமல்லாமல், பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் டிஜிட்டல் எடிஷன் மாடலுக்கும் ரூ.5,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

சோனி நிறுவனத்தின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் மட்டுமல்லாமல், அமேசான் (Amazon), ஃபிளிப்கார்ட் (Flipkart), பிளின்கிட் (Blinkit), குரோமா (Croma), ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) மற்றும் விஜய் சேல்ஸ் (Vijay Sales) போன்ற தளங்கள் மூலமும் ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது, பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் விலையை தெரிந்து கொள்ளலாம்.
பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் கேமிங் கன்சோலின் விலை ரூ.54,989ஆக இருக்கிறது. அதேபோல பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் டிஜிட்டல் எடிஷன் கேமிங் கன்சோலின் விலை ரூ.49,990ஆக இருக்கிறது. இந்த விலையில் குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட்களும் கொடுக்கப்படுகிறது. ஆனால், செப்டம்பர் 22ஆம் தேதி முதல் ரூ.5,000 தள்ளுபடியில் வாங்கி கொள்ளலாம்.
இதற்கு பேங்க் கார்டுகள் தேவைப்படாது, மொத்த விலையில் இருந்து ரூ.5,000 குறைப்பு செய்யப்பட இருக்கிறது. ஆகவே, கேமிங் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் செய்ய வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஜிடிஏ 5, ஸ்பைடர் மேன், காட் ஆஃப் வார் போன்ற பல்வேறு பிஎஸ்5 கேம்களுக்கு இங்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பலர் பிஎஸ்5 வாங்குவதை கனவாக வைத்துள்ளனர்.
பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் அம்சங்கள் (PlayStation 5 Slim Specifications): டிஸ்க் எடிஷன் மற்றும் டிஜிட்டல் எடிஷனில் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப விலை மற்றும் பீச்சர்கள் மாறுகின்றன. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கிடைக்கிறது. வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் ஜிகாபைட் ஈதர்நெட் (Gigabit Ethernet) கனெக்டிவிட்டி கிடைக்கிறது.
மேலும், 4 யுஎஸ்பி போர்ட்கள் கிடைக்கிறது. இதில் 2 போர்ட்கள் டைப்-சி (Type-C) மற்றும் 2 போர்ட்கள் டைப்-ஏ (Type-C) ஆக இருக்கிறது. 3டி ஆடியோ டெக் (3D Audio Tech) கிடைக்கிறது. டிவிகளில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4K ரெசொலூஷனில் கேமிங்களை விளையாடி கொள்ளலாம். இதுபோக வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
இது உங்களது டிஸ்பிளே டிவைஸ்களுக்கு ஏற்ப மாறும். இதற்காக எச்டிஎம்ஐ போர்ட் கிடைக்கிறது. டிஸ்க் எடிஷனில் அல்ட்ரா எச்டி ப்ளூ ரோய் (Ultra HD Blue-ray) ஆப்டிகல் டிரைவ் கிடைக்கும். ஆனால், டிஜிட்டல் எடிஷனில் கிடைக்காது. மேலும், எச்டிஆர் டெக்னாலஜி (HDR Technology), ரேய் டிரேசிங் (Ray Tracing) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கிவிட்டால், அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களும் ஆஃபர்களை வாரி வழங்க தொடங்கிவிட்டன. இப்போது, சோனி நிறுவனமும், கேமிங் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல்களுக்கு தள்ளுபடி கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








