Home
Gadgets

பட்ஜெட்ல சிக்குன்னு இருக்கு.. Smartphone விலையில் வெளிவந்த SONY PS5 Slim.. என்ன விலை? எப்போ ஆர்டர் செய்யலாம்?

சோனி (Sony) நிறுவனத்தின் புதிய சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் (SONY PlayStation 5 Slim) மாடல் கேமிங் கன்சோல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை புதிய பிளேஸ்டேஷன் சாதனம், எதிர்பார்த்திடாத விதமாக ஸ்மார்ட்போன் வாங்கும் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது.

ஸ்மார்ட்போன் விலையில் சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் கன்சோல் வாங்கலாமா? என்று ஆச்சரியமாக சிலர் பார்ப்பீர்கள், உண்மையிலேயே மிகவும் குறைந்த விலையில் தான் இந்த முறை சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் கேமிங் கன்சோல் (SONY PlayStation 5 Slim Gaming Console) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் SONY PlayStation 5 Slim கன்சோல் விலை ரூ.44,990 முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்ல சிக்குன்னு இருக்கு.. Smartphone விலையில் SONY PS5 Slim..

சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் கேமிங் கன்சோல் (SONY PlayStation 5 Slim Gaming Console):

இந்த முறையும் சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் கேமிங் கன்சோல் வழக்கம் போல 2 விதமான எடிஷன்களில் வெளிவருகிறது. இதன் முதல் எடிஷன் மாடல் டிஸ்க்லெஸ் (disc-less) மாடலான சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் டிஜிட்டல் எடிஷன் (Digital edition) மாடலாக வெளிவருகிறது. இதன் மற்றொரு மாடல் டிஸ்க் (Disc version) உள்ளீட்டை அனுமதிக்கும் சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் டிஸ்க் எடிஷன் மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

PS5 Slim இந்தியாவில் என்ன விலை?

சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் கேமிங் கன்சோலின் டிஜிட்டல் எடிஷன் (Sony PlayStation 5 Slim Digital Edition Price) என்று அழைக்கப்படும் டிஸ்க்லெஸ் மாடலின் ஆரம்ப விலை ரூ.44,990 விலை முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்க் வெர்ஷன் (SONY PS5 Slim Disc Version Price) மாடல் இந்திய சந்தையில் ரூ. 54,990 என்ற விலை முதல் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது இந்தியாவில் விற்பனை?

சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் கேமிங் கன்சோலின் டிஸ்க்லெஸ் மற்றும் டிஸ்க் எடிஷன் ஆகிய 2 மாடல்களும் வரும் ஏப்ரல் 5, 2024 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் இந்தியா முழுக்க உள்ள ஆன்லைன் (Online) மற்றும் ஆப்லைன் (Offline) மற்றும் சோனி விற்பனையாளர் கடைகள் (SONY stores) வழியாக வாங்க கிடைக்கும்.

பட்ஜெட்ல சிக்குன்னு இருக்கு.. Smartphone விலையில் SONY PS5 Slim..

PS5 மற்றும் PS5 Slim இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு என்ன?

சோனி பிளேஸ்டேஷன் 5 மற்றும் சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். இதன் பெயர் குறிப்பிடுவது போல, பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் என்பது கேமிங் சோனி பிளேஸ்டேஷன் 5 கன்சோலின் லைட்டர் வெர்ஷன் பதிப்பாகும். இது வழக்கமான PS5 ஐ விட 25 சதவிகிதம் ஸ்லிம் ஆனது.

PS5 உடன் ஒப்பிடுகையில், இதற்கு 30 சதவிகிதம் குறைவான இடம் தேவைப்படுகிறது. அதேபோல், வழக்கமான PS5 104mm x 390mm x260mm அளவைக் கொண்டுள்ளது. புதிய PS5 ஸ்லிம் மாடலானது 96mm x 358mm x 216mm அளவைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் பதிப்பு டிஸ்க் மாடலை விட மெலிதானது மற்றும் இலகுவானது. இரண்டு கன்சோல்களுக்கு இடையிலான மற்றொரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், PS5 ஸ்லிம் 1TB இன்பில்ட் ஸ்டோரேஜ்ஜை கொண்டுள்ளது.

மறுபுறம், PS5 நார்மல் கேமிங் கன்சோல் சாதனம் 825GB கொண்ட இன்பில்ட் ஸ்டோரேஜ்ஜை கொண்டுள்ளது. சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் ஆனது x86-64-AMD Ryzen Zen 2 CPU மற்றும் AMD ரேடியான் RDNA 2-அடிப்படையிலான கிராபிக்ஸ் எஞ்சின் மற்றும் ரே ட்ரேசிங் ஆசிலரேஷன் அம்சங்களுடன் இயங்குகிறது. இது 16GB GDDR6 ரேம் மற்றும் 1TB SSD ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இதில் இரண்டு USB Type-C மற்றும் USB Type-A போர்ட்கள் உள்ளன. PS5 ஸ்லிம் 4K 120Hz டிவிகள் மற்றும் 8K டிவிகளையும் ஆதரிக்கிறது. இந்த புதிய சோனி பிளேஸ்டேஷன் 5 ஸ்லிம் கன்சோலை வாங்க விரும்புவோர் ஏப்ரல் 5ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியாக ஆர்டர் செய்து வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony PlayStation 5 Slim Digital Edition Price Rs 44900 and Disc Version Rs 54990 In India Sales Starts April 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X