சுட்டா வலிக்கும் குத்துனா வலிக்கும் வலியை உணர்த்தும் சோனி கேமிங் சூட்.! வி.ஆர் கேமிங்கின் உச்சம்.!

|

விர்ச்சுவல் ரியாலிட்டி கேமிங் துறையில் சோனி நிறுவனம் புது சேவையை உலகிற்கு அறிமுகம் செய்யவுள்ளது. சோனி நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்துள்ள அதன் வி.ஆர் கேமிங் கியர்களை கொண்டு கேமர்களுக்கு காட்சி சேவையை வழங்கி வந்தது, தற்பொழுது ஒரு படி மேலே போய், கேம் மூலம் வலிகளை உணர வைக்கப் போகிறதாம்.

வி.ஆர் ஹேண்டு கிளவுஸ்

வி.ஆர் ஹேண்டு கிளவுஸ்

ஆம் சோனி நிறுவனத்தின் அண்மைய அறிவிப்பின் படி, சோனி வி.ஆர் ஹேண்டு கிளவுஸ் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. மோஷன் சென்சார்கள் மூலம் இயங்கும் இந்த க்ளோவ்ஸ்கள் மூலம் கேமை கேமர்கள் எளிதாக கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.

"ரெடி பிளேயர் ஒன்" திரைப்படம் போல்

அதேபோல் அடுத்தபடி முயற்சியாக "ரெடி பிளேயர் ஒன்" திரைப்படத்தில் வந்தது போல, கேமர்களுக்காக பிரத்தியேக முழு கேமிங் சூட் ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. படத்தில் வருவது போல கேமில் நடக்கும் அனைத்து விபரங்களையும் இந்த சூட் மூலம் கேமர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

சிறிய வழியை உணர வைக்கும் கேமிங் சூட்

சிறிய வழியை உணர வைக்கும் கேமிங் சூட்

கேமில் விளையாடும் பொழுது குண்டுகள் உங்கள் மீதி பாய்ந்தால், நேரடியாக உங்கள் உடலில் சிறிய வழியை, இந்த சூட் உணர வைக்கும். குத்துச் சண்டை கேமில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு குத்துகளும் நேரடியா உங்கள் உடலில் வாங்கியது போல் சிறிய வலியுடன் உணர முடியும் என்று சோனி தெரிவித்துள்ளது.

அல்டிமேட் ரியாலிட்டி அனுபவம்

அல்டிமேட் ரியாலிட்டி அனுபவம்

காட் ஆப் வார்ஸ் போன்ற கேம்களில் நீங்கள் மலைப் பிரதேசத்தில் ஏறும் பொழுது, அங்குள்ள குளிரை நேரடியாக இந்த சூட் உங்களுக்கு வழங்கும் என்று சோனி தெரிவித்துள்ளது. அல்டிமேட் ரியாலிட்டி அனுபவத்திற்காக இந்த முயற்சியை சோனி நிறுவனம் கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் உணர் திறன் கொண்ட கேமிங் சூட்கள்

விரைவில் உணர் திறன் கொண்ட கேமிங் சூட்கள்

இது போன்று இன்னும் பல ரியல் உணர்வுகளை உணர வைக்கும் கேமிங் சூட்டைச் சோனி தயாரித்து வருகிறது என்றும் மிக விரைவில் இந்த உணர் திறன் கொண்ட கேமிங் சூட்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் சோனி தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
sony people will soon play vr games with suits that let you feel punches bullets : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X