Home
Gadgets

பக்கத்து ஊரு வரை கேட்கும்.. ஒரே நேரத்துல 100 ஸ்பீக்கர்ஸ் கூட Link ஆகும் புது SONY ஸ்பீக்கர்.. என்ன விலை?

சோனி (SONY) நிறுவனமானது இந்தியாவில் உள்ள ம்யூசிக் லவ்வர்களை தன்வசம் ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் 3 "முரட்டுத் தனமான" ஸ்பீக்கர்கள் மற்றும் "கிளாஸ் ஆன" 1 வயர்லெஸ் ஹெட்போன்ஸ் என மொத்தம் 4 புதிய ஆடியோ தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. சோனியின் புதிய அல்ட் பவர் சவுண்ட் சீரிஸின் (Ult Power Sound series) அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஆடியோ தயாரிப்புகளின் மாடல் பெயர்கள் என்ன? அம்சங்கள் என்ன? விலை என்ன? இதோ விவரங்கள்:

'அல்ட் பவர் சவுண்ட்' என்று பெயரிடப்பட்ட சோனியின் புதிய சீரிஸின் கீழ் 3 ப்ளூடூத்-எனேபிள்டு ஸ்பீக்கர்கள் மற்றும் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனியின் கூற்றுப்படி, இந்த சீரீஸ் முழுவதுமே சக்திவாய்ந்த டீப் பாஸ்-ஐ வழங்கும். மேலும் இது கிராமி விருது வென்ற பெசோ ப்ளுமா (Peso Pluma) உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

SONY-யின் புதிய Tower, Field ஸ்பீக்கர்ஸ் மற்றும் Wear ஹெட்போன்ஸ்!

இந்த சீரிஸின் கீழ் அறிமுகமான 3 புதிய ப்ளூடூத்-எனேபிள்டு ஸ்பீக்கர்கள் ஆனது அல்ட் டவர் 10 (Ult Tower 10), அல்ட் பீல்ட் 7 (Ult Field 7), அல்ட் பீல்ட் 1 (Ult Field 1) மற்றும் அல்ட் வியர் (Ult Wear) என்று அழைக்கப்டுகின்றன.

மேலும் இந்த சீரீஸில் உள்ள அனைத்து மாடல்களுமே அல்ட் பட்டனுடன் (Ult Button) வருகின்றன, இது பயனர்கள் இரண்டு ஆடியோ மோட்களுக்கு இடையே தேர்ந்தெடுக்க அனுமதிப்பதன் மூலம் (Select between two audio modes) ஒட்டுமொத்த ஆடியோ அனுபவத்தையும் (Overall audio experience) மேம்படுத்துகிறது.

அல்ட் டவர் 10 ஸ்பீக்கரின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள்: அல்ட் டவர் 10 என்பயது அல்ட் பவர் சவுண்ட் (Ult Power Sound) என்கிற ஒரு தொழில்நுட்பத்துடன் வரும் ஒரு பார்ட்டி ஸ்பீக்கர் ஆகும். சோனியின் கூற்றுப்படி இந்த தொழில்நுட்பம் - விதிவிலக்கான பாஸிற்கான லோ-எண்ட் அதிர்வெண்களை மேம்படுத்துகிறது.

கூடவே இதன் அல்ட் பட்டன் ஆனது ஆழமான, குறைந்த அதிர்வெண் பாஸ் மற்றும் அதிக சக்திவாய்ந்த பஞ்சியர் பாஸ் ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யவும் பயனர்களை அனுமதிக்கிறது. மேலும் இது இசையுடன் ஒத்திசைக்கும் மற்றும் மேல் டாப் பேனலில் எக்கோ மற்றும் முக்கிய கண்ட்ரோல்களுடன் வரும் ஆம்னி டைரக்ஷனல் லைட்டிங்கையும் கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கரின் விலை ரூ.89,990 ஆகும்.

அல்ட் பீல்ட் 7 ஸ்பீக்கரின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள்: சோனி அல்ட் ஃபீல்ட் 7 என்பது டைனமிக் லைட்டிங் மற்றும் கரோக்கிக்கான மைக் போர்ட் கொண்ட மற்றொரு போர்ட்டபிள் பாஸ்-ஹெவி பார்ட்டி ஸ்பீக்கர் ஆகும். இது பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. சோனியின் கூற்றுப்படி இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை பிளே ஆகும்.

சுவாரசியமாக இது நீர் மற்றும் தூசி-எதிர்ப்பிற்கான ஐபி67 ரேடிங்கையும் கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கரின் பின் பேனலில் எக்கோ மற்றும் கீ கன்ட்ரோல்கள் உள்ளன எல்லாவற்றை விட முக்கியமாக, இதில் உள்ள பார்ட்டி கனெக்ட் என்கிற அம்சத்தின் வழியாக, இந்த ஸ்பீக்கருடன் 100 இணக்கமான ஸ்பீக்கர்களை லிங்க் செய்ய முடியும். இதன் விலை ரூ.39,990 ஆகும்.

அல்ட் பீல்ட் 1 ஸ்பீக்கரின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள்: இது யணத்தில் இருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய ப்ளூடூத்-எனேபிள்டு ஸ்பீக்கர் ஆகும். எக்கோ கேன்செலிங் தொழில்நுட்பத்துடன் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனுடன் இந்த ஸ்பீக்கர் 12 மணிநேர பேட்டரி லைஃப், ஐபி67 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ரேட்டிங் உடன் வருகிறது. பிளாக், ஆப்-ஒயிட், பாரஸ்ட் க்ரே மற்றும் ஆரஞ்சு கலர்களில் வரும் இந்த ஸ்பீக்கரின் விலை ரூ.10,990 ஆகும்.

அல்ட் வியர் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள்: சோனியின் இந்த லேட்டஸ்ட் வயர்லெஸ் ஹெட்ஃபோன், பாஸ்-ஐ விரும்புபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கஸ்டமைஸ்டு இக்யூ-க்கள், 260 ரியாலிட்டி ஆடியோ, நாய்ஸ் கேன்சலேஷன், அல்ட் பட்டன், சோனியின் 1000எக்ஸ் சீரிஸ் ஹெட்ஃபோன்களில் உள்ள சக்தியளிக்கும் ஒருங்கிணைந்த இன்டெக்ரேடட் ப்ராசஸர் வி1 போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது. இந்த வயர்லெஸ் ஹெட்போன்ஸின் விலை ரூ.16,990 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony New Ult Tower 10 Ult Field 7 Ult Field 1 Speakers Ult Wear Headphone Price in India Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X